கலப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு.. ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடி!
உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி காதல் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மதுரையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி காதல் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மதுரையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
கலப்பு திருமணம் செய்தவர்கள் ஆணவ கொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவின் பேரில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் காவல் துணை ஆணையர், சமூகநல அதிகாரி, ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோர் மேற்பார்வையில் இந்த சிறப்பு தனிப்பிரிவு செயல்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்த தனிப்பிரிவு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலப்பு திருமணம் செய்பவர்கள் அச்சுறுத்தல் காரணமாக அளிக்கும் புகாரை விசாரிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கலப்பு திருமணம் செய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை அளிக்க 0452 - 2346302 என்ற தொலைப்பேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications