வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை இழுத்து வந்து வெட்டிக் கொன்ற கும்பல்... சென்னையில் பயங்கரம்
சென்னையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை நள்ளிரவில் வீடு புகுந்து இழுத்து வந்த மர்மநபர்கள் அவரை தெருவில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
சென்னை: மேடவாக்கத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை நள்ளிரவில் வீடு புகுந்து இழுத்து வந்த மர்மநபர்கள் அவரை தெருவில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர். படுகாயங்களுடன் தப்பிய அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த அறிவழகன், ராயப்பேட்டையில் உள்ள தனியார் தியேட்டர் மாலில் எலக்ட்ரிக்கல் பிரிவு இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுரேகா என்ற மனைவியும் சாதனா என்ற 4வயது மகளும் உள்ளனர்.

நேற்றிரவு இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம்கேட்டு அவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது உள்ளே புகுந்த மர்மநபர்கள் 4 பேர் கணவன் மனைவி இருவரையும் மதுபாட்டிலால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர். பெற்றோரின் சத்தம் கேட்டு எழுந்த மகள் சாதனா நடப்பதைக் கண்டு பயந்து பீரேவின் பின்புறம் பதுங்கிக்கொண்டாள்.
இதையடுத்து மர்மநபர்கள் கணவன் மனைவி இருவரின் கழுத்தையும் அறுத்தனர். இதில் சுரேகா ரத்தவெள்ளத்தில் சரிந்து மயக்கமானார். பின்னர் அறிவழகனை வீட்டிலிருந்து தரதரவென இழுத்துச் சென்ற அந்தகும்பல் வீட்டின் வெளியே வைத்து அவரை ஆத்திரம் தீர கத்தியால் குத்தினர்.
இதில் அறிவழகன் அங்கேயே உயிரிழந்தார். இன்று காலை இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சுரேகாவின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த சுரேகாவின் தாய் பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தார். மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுரேகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முன்விரோதம் காரணமாக அறிவழகன் கொல்லப்பட்டரா அல்லது கள்ளக்காதல் விவகாரமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications