For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரீமை தடவியதுமே நீங்க 'சிவாஜி' போல சிவப்பாகிடுவீங்களாம் பாஸ்: இந்த விளம்பரத்தில் சொல்றாங்க!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஒரு முன்னணி நிறுவனத்தின் சிவப்பழகு கிரீம் விளம்பரம் நம்பும்படியாக இல்லை.

பெண்கள் மட்டும் தான் சிவப்பழகு கிரீம் எல்லாம் பயன்படுத்துவார்கள் என்று இல்லை. அவர்களுக்கு போட்டியாக ஆண்களும் கிரீம்களை அள்ளிப் பூசிக் கொள்கிறார்கள். இப்படி கிரீம் பூசியாவது சிவப்பாகிவிட மாட்டோமா என்று நினைப்பவர்களை குறி வைத்து சிவப்பழகு கிரீம் நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன.

நம்ம ஆட்களும் விளம்பரத்தை பார்த்து மயங்கிவிடுகிறார்கள்.

மாடல்

மாடல்

சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் வரும் மாடல் அந்த கிரீமை பூசியதும் சிவப்பாக ஆகிவிடுவது போல் காட்டுவது வழக்கம்.

உடனே

உடனே

ஒரு பிரபல நிறுவனம் தனது சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் கிரீமை தடவிய நிமிடமே நீங்கள் சிவப்பாகிவிடுவீர்கள் என்கிறது. இது நம்பும்படியா உள்ளது?

பொய்

பொய்

உடனே சிவப்பாகிவிடலாம் என்று கூறும் அந்த நிறுவனத்தின் கிரீம்களை இத்தனை ஆண்டுகளாக தடவி வரும் நம்ம வீட்டு பெண்களும், ஆண்களும் அதே நிறத்தில் தான் இருக்கிறார்கள். வருடக் கணக்கில் தடவி வராத சிவப்பழகு ஒரே நிமிஷத்தில் வந்துவிடுகிறதாம்.

குப்பனும், சுப்பனும்

குப்பனும், சுப்பனும்

நம்ம குப்பனும், சுப்பனும் சிவப்பாக ஆசைப்பட்டு அந்த கிரீமை தடவவில்லை அதிலேயே முங்கி எழுந்தபோதிலும் நிறம் மாறவில்லை என்பது தான் உண்மை.

நாள் முழுவதும்

நாள் முழுவதும்

கிரீமை தடவியவுடன் சிவப்பாவது மட்டும் இல்லையாம் நாள் முழுவதும் நீங்கள் சிவப்பாகவும், பளிச்சென்றும் இருப்பீர்கள் என்று விளம்பரத்தில் காண்பிக்கிறார்கள். நம்ம ஊரில் அடிக்கும் வெயிலுக்கு என்ன கிரீம் தடவினாலும் நிமிஷத்தில் மறைந்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டதே.

கருப்பே அழகு

கருப்பே அழகு

பாஸ், சிவப்பாக வேண்டும் என்று கிரீம்களை அள்ளிப் பூசுவதை விட இயற்கை நிறமே அழகு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கருப்பாக இருந்தாலும் நம்ம ஆளுங்க களையாகத் தான் இருக்கிறார்கள்.

English summary
A fairness cream advertisement has become butt of jokes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X