இதுதான் தினகரன் கஷ்டப்பட்டு தேடிப் பிடித்த "அந்த" வீடியோ.. "வெட்டிங்+ஒட்டிங்" சூப்பரா கீதுபா!
சென்னை: வவுத்துல நோவுன்னா வாய் கோணிக்குமா.. அந்தக் கதையா கீது இது. ஆர்.கே.நகரில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்காக ஒரு செட்டப் வீடியோவை உலவ விட்டு ஒட்டுமொத்தமாக மக்கள் மத்தியில் காமெடீ பீஸாக்கியுள்ளனர் அவரை.
தினகரன் கட்சியின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களின் இந்த கிராபிக்ஸ் வேலையைப் பார்க்கும்போது எப்பவாவது சீட்டிங் என்றால் பரவாயில்லை. எப்பவுமே சீட்டிங்னா எப்படி பாஸ் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
அதாவது தினகரன் முன்பு பெரியகுளம் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது ஜெயலலிதா செய்த பிரசார வீடியோவையும், அதிமுக வின் கேரள வேட்பாளருக்கு ஆதரவாக அவர் செய்த பிரசார வாசகத்தையும் இணைத்து அதாவது தமிழக பிரசாரத்தையும், கேரள பிரசாரத்தையும் இணைத்து பெரிய மோசடி வீடியோவை தயாரித்துள்ளனர் தினகரன் கட்சியினர்.

பெரியகுளத்தில் போட்டியிட்டபோது
முன்பு பெரியகுளத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார் தினகரன். அவரை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அப்போது பேசிய வீடியோவைத்தான் ரொம்ப நாட்களாக தேடி வந்தார் தினகரன்.

நல்லவர் வல்லவர்
அந்த பிரசாரத்தின்போது ஜெயலலிதா, தினகரனை நல்லவர் வல்லவர் என்று வாய் வலிக்க வலிக்க பேசியிருப்பார். அந்த வீடியோவை ரொம்பக் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்தது தினகரன் தரப்பு.
|
மிக்ஸிங் ரெடியா
இந்த வீடியோவில் தினகரனை புகழ்ந்து அவருக்கு வாக்களியுங்கள் என்று வரும் பகுதியை தனியாக எடுத்துக் கொண்ட இந்தக் குரூப், கூடவே ஒரு மிக்ஸிங் வேலையைச் செய்துள்ளது.

தொப்பிக்கு வாக்கு கேட்டதை கோர்த்து
கேரளாவில் அதிமுக தொப்பி சின்னத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்டது. அப்போது தொப்பி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா பேசியதைத் தூக்கி இந்த வீடியோவில் கோர்த்து விட்டு விட்டனர். இதைக் கேட்டதும், பார்த்ததும், அப்படியே ஆர்.கே.நகர் மக்கள் எல்லாம் கண் கலங்கிப் போய், வேகமாக ஓடி வந்து தொப்பியைப் பார்த்து ஓட்டுப் போட்டு குவித்து விடுவார்கள் என நம்புகிறதாம் தினகரன் தரப்பு.. எப்பூடி!
என்னா புத்திசாலித்தனம் பாஸ்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications