சொத்து கிடைக்கணும்னா என்ன வேணா செய்வேன்... சென்னையில் 4 வயது சிறுமியை கொன்ற கர்ப்பிணி வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை குன்றத்தூரில் 4 வயது சிறுமியை நேற்று கர்ப்பிணி பெண் ஒருவர் கொலை செய்து இருக்கிறார். பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி குழந்தையை அதில் முக்கி கொன்று இருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட கௌசிகா என்ற குழந்தையின் சொத்துக்களை அபகரிப்பதற்காக கொலை செய்ததாக குற்றவாளி ஆஷா போலீசிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

மேலும் கௌசிகா அவருக்கு பிறக்காத குழந்தை என்றும் அவரது கணவனின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை என்பதும் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.

 முதல் மனைவியை பிரிந்தார்

முதல் மனைவியை பிரிந்தார்

சென்னை குன்றத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் என்ற நபர் ஜெயந்தி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கௌசிகா என்ற பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையில் நடந்த சண்டை காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இதையடுத்து கௌசிகா, ஜெயந்தியுடன் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

 ஆஷாவுடன் வாழ்க்கை

ஆஷாவுடன் வாழ்க்கை

தனியாக இருந்த தர்மலிங்கம் கடந்த சில மாதங்களாக ஆஷா என்று பெண்ணுடன் சேர்ந்து வாழ தொடங்கி இருக்கிறார். அதே சமயத்தில் தர்மலிங்கத்தின் குழந்தை கௌசிகா வராம் ஒருநாள் வந்து அப்பாவுடன் தங்கி இருக்கிறார். தர்மலிங்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் முறைப்படி முதல் குழந்தையான கௌசிகாவுக்கு மட்டுமே செல்லும். இந்த விஷயம் தெரிந்த ஆஷா அடிக்கடி தர்மலிங்கத்துடன் சண்டையிட்டு இருக்கிறார்.

 குழந்தையை கொலை செய்தார்

குழந்தையை கொலை செய்தார்

இதையடுத்து ஆஷா சொத்துக்களை எப்படியாவது அபகரிக்க திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த கௌசிகாவை ஆஷா மிகவும் கொடுமைபடுத்தினார். மேலும் அவளை பாக்கெட்டில் தண்ணீர் நிரம்பி அதில் முக்கி கொலை செய்து இருக்கிறார். மேலும் இந்த ஆஷா இந்த கொலையை செய்த போது கர்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 அதிர்ச்சி அடைந்த தர்மலிங்கம்

அதிர்ச்சி அடைந்த தர்மலிங்கம்

அலுவலகத்திற்கு சென்ற தர்மலிங்கம் மாலை ஏழு மணிக்குத்தான் வீடு திரும்பினார். அதுவரை இறந்த குழந்தையின் உடல் அங்கேயே இருந்து இருக்கிறது. அதை பார்த்த தர்மலிங்கம் போலீசுக்கு புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் ஆஷா ''தர்மலிங்கத்தின் சொத்துக்கள் எனக்கு வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்'' என வெளிப்படையாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A four year old child called Goshika was allegedly murdered by Asha in Chennai. Asha who is pregnant killed Goshika to get all her property.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற