தூக்கத்தில் எழுந்து அம்மாவை தேடிய 4வயது பெண் குழந்தை.. 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து பலி
சென்னை சூளைமேட்டில் 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சூளைமேட்டில் 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேட்டில் சித்ரா அவென்யூ என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் உரிமையாளரான கிருஷ்ணமூர்த்தி 7-வது தளத்தில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் நேபாளத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கோபால் தனது மனைவி கீதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அலுவலகத்திலேயே ஒரு பகுதியில் தங்கியுள்ளார்.

பால்கனி
குடியிருப்பின் பிற வீடுகளின் பால்கனிகளில் முறையான தடுப்புக் கம்பிகள் உள்ள நிலையில் இது அலுவலகம் என்பதால் முறையான தடுப்புக் கம்பிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

அம்மாவை தேடிய குழந்தை
இந்நிலையில் நேற்று இரவு கீதா 4 வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கைக்குழந்தையுடன் கீழ் தளத்துக்கு வந்துள்ளார். அப்போது கண்விழித்த 4 வயது குழந்தை சாரதா அம்மாவை தேடியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
அம்மாவை தேடி பால்கனி பகுதிக்குச் சென்ற சாரதா அங்கிருந்து எட்டிப்பார்த்தபோது திடீரென தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தை பலி
ஆனால் குழந்தை சாரதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications