சென்னையில் அதிர்ச்சி.. நீட் வகுப்புக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம்!
சென்னை முகப்பேரில் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 பெறியியல் மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Recommended Video

சென்னை: முகப்பேரில் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 பெறியியல் மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேரை சேர்ந்த மாணவி ஒருவர் துபாயில் ஓராண்டு மருத்துவப்படிப்பு படித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இவர் சென்னையில் மருத்துவம் படிக்க முயற்சி செய்துவருகிறார்.
இதற்காக சென்னையில் நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். வழக்கம்போல் நீட் வகுப்புக்கு சென்ற அவரை பொறியியல் மாணவர்கள் சிலர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பொறியியல் மாணவர்கள் கைது
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அண்ணாநகர் மகளில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பொறியியல் மாணவர்கள் ப்ரவின் மற்றும் சுரேந்தர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்திச் சென்று பலாத்காரம்
விசாரணையில் பள்ளியில் வகுப்பு சீனியரான ப்ரவீன் ஒருதலை காதல் காரணமாக மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள நண்பர் வீட்டில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

போன் மூலம் தொல்லை
துபாயில் படிக்கும்போதே பிரவின் போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்துள்ளார். வடபழனியைச் சேர்ந்த ப்ரவீன் முத்துகுமரன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றொரு மாணவரான சுரேந்தர் செயின்ட் பீட்டர் கல்லூரி மாணவர் ஆவர்.

பள்ளி மாணவி 4 வருடங்களாக..
இரண்டு மாணவர்களையும் கைது செய்துள்ள போலீசார் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பள்ளி மாணவியை 4 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடரும் பலாத்காரம் சம்பவங்கள்
இந்நிலையில் நீட் வகுப்புக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தொடரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications