எம்டியோட டார்ச்சர் தாங்க முடியல.. நான் இருக்கறதே பிரயோஜனம் இல்லை.. வாட்ஸ் ஆப்பில் பெண் கதறல்
Recommended Video

கோவை: கோவையில் எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாக இயக்குநரின் செக்ஸ் டார்ச்சல் தாங்க முடியவில்லை என வாட்ஸ் ஆப்பில் பெண் ஒருவர் கருத்துகளை பறிமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதான இவர் அதே பகுதியில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த கல்லூரியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம்(64).
இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்களை பின்னால் சென்று கட்டிபிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் ஆக இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அங்கு பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லைகளை செய்து வந்துள்ளார்.

கவிதாவுக்கு பலமுறை தொல்லை
தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பணிக்கு வரும் இளம் பெண்கள் பலர் இவரது பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் வேலையை விட்டு சென்றுள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வரும் கவிதாவுக்கு பலமுறை பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
[கோவை கல்லூரி நிர்வாக இயக்குநர் மீது பெண் பாலியல் புகார்.. விரட்டி விரட்டி முத்தமிடும் வீடியோ!]

வாட்ஸ் ஆப்பில் மெசேஜ்
இந்நிலையில் இதுகுறித்து நிர்வாக இயக்குநரின் மகனும் கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளினிடம் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில் சார் உங்கள நம்பிதான் எம்டி சார் கொடுத்த செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு அமைதியாக இருந்தேன்.

பிரயோஜனம் இல்லை
நேத்து கூட நீங்க பேசும் போது வீடியோல இருக்கிறது நான் இல்லைனு சொல்ல சொன்னீங்க. எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா நீங்களும் எம்டி சாரும்தான் காரணம். என்னால் முடியலை. நான் இருக்கிறது பிரயோஜனம் இல்லை என்று அனுப்பியுள்ளார்.

மகிழ்ச்சி
இதற்கு அந்த நளின் பதில் அளிக்கையில் இத்தனை நாட்களாக நீங்கள் எதையும் சொல்லவில்லை. நான் உங்களை அதுபோல் நடந்து கொள்ளவும் சொல்லவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கூட நீங்களும் நானும் பேசி கொண்டிருந்த போது இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளதாகவே கூறியுள்ளீர்கள்.

அதிர்ச்சி
எதுவாக இருந்தாலும் என்னை நேரில் சந்தித்து உங்கள் குறைகளை கூறுங்கள். உங்கள் பிரச்சினையை நான் சரி செய்கிறேன். உங்கள் மெசேஜை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளது என்று நளின் அனுப்பியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications