பேஸ்புக் நட்பு.. நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் பறிக்கும் கும்பல்.. சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் பேஸ்புக் மூலம் அறிமுகமாபவர்களை லாட்ஜ்க்கு அழைத்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் பறிக்கும் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Recommended Video

சென்னை: பேஸ்புக் மூலம் அறிமுகமாபவர்களை லாட்ஜ்க்கு அழைத்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் பறிக்கும் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நம் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சமூக வலைதளங்களால் நன்மைகள் இருந்தாலும் அவற்றுக்கு இணையாக ஆபத்துகளும் நிறைந்தே உள்ளன.
சென்னையில் பேஸ்புக்கில் அறிமுகம் ஆகுபவர்களை லாட்ஜ்க்கு அழைத்து ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மந்திரமூர்த்தி
தூத்துக்குடியை சேர்ந்தவர் மந்தீரமூர்த்தி. இவர் வடபழனி ஆற்காடு சாலையில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வருகிறார்.

ஓரினச்சேர்க்கையில் ஆர்வம்
மந்திரமூர்த்திக்கு திருமுல்லைவாயிலை சேர்ந்த தினேஷ்பாபு பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளார். தினேஷ் பாபுவுடன் மந்திரமூர்த்தி செய்த சேட்டிங்கில் அவர் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

ரூமுக்கு வர வற்புறுத்தல்
இதையடுத்து தினேஷ்பாபுவை பார்க்கவேண்டும் என ஆசையாக பேசியுள்ளார் மந்திரமூர்த்தி. மேலும் தினேஷ் பாபுவை தன்னை சந்திக்க வருமாறு வற்புறுத்தியுள்ளார் மந்திரமூர்த்தி.

அறையில் பேச்சு
அவரது பேச்சில் நம்பி தினேஷ் பாபுவும் மந்திர மூர்த்தியை காண அவர் சொன்ன தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது மந்திரமூர்த்தியும் தினேஷ் பாபுவும் பேசிக்கொண்டிருந்தனர்.

நிர்வாணப்படுத்தி வீடியோ
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அறைக்குள் புகுந்த மூன்று பேர் தினேஷ் பாபுவை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்துள்ளனர்.

அடித்து மிதித்து மிரட்டல்
பின்னர் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி 40 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என தினேஷ் பாபு கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தினேஷ் பாபுவை அடித்து மிதித்து துன்புறுத்தியுள்ளது.

திரண்ட அக்கம்பக்கத்தினர்
அடித்தாங்க முடியாமல் கத்தியுள்ளார் தினேஷ் பாபு. அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

15 பேரிடம் மோசடி
அப்போது மற்ற மூன்று பேரும் மந்திர மூர்த்தியின் நண்பர்கள் என்பது தெரியவந்தது.மேலும் இதையே தொழிலாக கொண்ட அவர்கள் இதுவரை 15 பேரை இதுபோன்று நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி பணம்பறித்ததும் தெரியவந்துள்ளது.

பெண்களை போல் பேசி
மந்திரமூர்த்தி பெண்களை போல் பேசி வரவழைத்து பணம்பறிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications