Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மறுத்த" மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்!

திருச்சி அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியின் தலையை துண்டித்து உடல் மற்றும் தலையுடன் விடிய விடிய கணவன் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்- வீடியோ

    திருச்சி: திருவெறும்பூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியின் தலையை துண்டித்து உடல் மற்றும் தலையுடன் விடிய விடிய கணவன் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். 30 வயதான இவர் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு, தஞ்சை, திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த, ஜெசிந்தா ஜோஸ்பின் என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது.

    [ நம்ம ஊர் லைசன்ஸ் வெளிநாடுகளிலும் இனி செல்லும்.. மத்திய அரசு அறிவிப்பு.. எங்கு தெரியுமா? ]

    நகைகள் அடகு

    நகைகள் அடகு

    இந்நிலையில், ஜோஸ்பின் பீரோவில் வைத்திருந்த நகைகள் சிலவற்றை, குடும்ப செலவுக்காக சங்கர் திருட்டுத்தனமாக அடகு வைத்துள்ளார். இதனையறிந்த ஜோஸ்பின் தனது நகைகளை அடகு வைத்தது குறித்து சங்கரிடம் கேட்டுள்ளார்.

    அடிக்கடி தகராறு

    அடிக்கடி தகராறு

    அதற்கு அவர் அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை என தெரிகிறது.இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற ஜோஸ்பின் தகராறு காரணமாக அங்கேயே தங்கியுள்ளார்.

    மறுத்த மனைவி

    மறுத்த மனைவி

    இதையடுத்து கணவன் சங்கர் மனைவியை வீட்டுக்கு வருமாறு மாமியார் வீட்டிற்கு மூன்று முறை சென்று அழைத்துள்ளார். ஆனால் நகைகள் இல்லாமல் நான் வரமாட்டேன் என மறுத்துள்ளார் ஜோஸ்பின்.

    வீட்டிற்கு வந்த மனைவி

    வீட்டிற்கு வந்த மனைவி

    இந்நிலையில் கடந்த, 5ம் தேதி, சங்கரின் தாயும் தந்தையும் ஜோஸ்பின் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசி அவரை அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த ஜோஸ்பினுக்கும் சங்கருக்கும் மீண்டும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    படுக்கை அறையில்..

    படுக்கை அறையில்..

    நேற்று முன்தினம் இரவு சங்கரின் பெற்றோர் மேல்தளத்தில் உறங்க சென்றுள்ளனார். சங்கரும் அவரது மனைவியும் கீழ்த்தளத்தில் உள்ள படுக்கை அறையில் தூங்க சென்றுள்ளனர்.

    இணங்க மறுத்த மனைவி

    இணங்க மறுத்த மனைவி

    அப்போது ஆசைக்கு இணங்குமாறு சங்கர் சகாயராஜ் அழைக்க, அவர் மீது கோபத்தில் இருந்த ஜோஸ்பின் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் சகாயராஜ், ஜோஸ்பினை கழுத்தை நெரித்தும் தலையணையால் அமுக்கியும் கொலை செய்துள்ளார்.

    தலையை துண்டித்த கணவன்

    தலையை துண்டித்த கணவன்

    இதில் மயக்க நிலைக்கு சென்ற ஜோஸ்பின் வாய் ஏதோ முனகியுள்ளது. இதனை கவனித்த சங்கர், ஆத்திரம் தீராமல், வீட்டில் இருந்த அரிவாளால் ஜோஸ்பின் தலையை வெட்டி துண்டித்துள்ளார்.
    பின்னர் படுக்கையிலேயே ஜோஸ்பின் உடலையும் தலையையும் தனித்தனியாக வைத்துவிட்டு பின், அந்த அறையிலேயே இரவு முழுவதும் தூங்கியுள்ளார்.

    அலறிய மாமியார்

    அலறிய மாமியார்

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 4 மணிக்கு தேவாலயத்திற்கு செல்வதற்காக மகனின் பெட்ரூம் கதவை தட்டியுள்ளார் சங்கரின் தாய். அப்போது கதவை திறந்த சங்கரின் மீது ரத்தக்கறை படிந்திருந்ததை கண்டு சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த அவர், படுக்கையில் ஜோஸ்பினின் தலை தனியாக உடல் தனியாக கிடப்பதைக் கண்டு அலறி கூச்சலிட்டார்.

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    அவரது சத்தத்தை கேட்டு வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார், சம்பவ இடம் சென்று, சங்கர் சகாயராஜை கைது செய்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+