கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்... காதல் மனைவியை கொன்று வீட்டிலே புதைத்த கணவன் கைது
கிருஷ்ணகிரி: காதல் மனைவியை கொலை செய்து வீட்டு மாட்டு கொட்டகையில் புதைத்த கொடூர கணவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சாரகப்பள்ளியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரிவேணி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். அனில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து அனில்குமார் கர்நாடக மாநிலம், கோடள்ளி என்ற பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி திரிவேணியிடம் பேசிய அனில்குமார் அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு தொலைபேசி மூலம் அழைத்தார். அதை நம்பி, திரிவேணி, அனில்குமார் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார்.
அதன் பின்னர் திரிவேணியிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் அவரின் பெற்றோர்கள் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் அனில்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் தனது மனைவி திரிவேணியை தனது சொந்த கிராமமான தளி அருகே உள்ள சாரகப்பள்ளிக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், பிறகு உடலை வீட்டின் மாட்டு கொட்டகையில் புதைத்து விட்டதாகவும் கூறினார்.
அதனை தொடர்ந்து தமிழக போலீசார் உதவியுடன் உடலை தோண்டி எடுத்த போலீசார் அதே இடத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உடலை எரித்தனர். பின்னர் கர்நாடக போலீசார் அனில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications