அடப்பாவி.. கள்ளக்காதலியை மனைவியாக்க இந்த கணவன் குடும்பத்துடன் செய்த செயலை பாருங்க..!
நாகை அருகே கள்ளக்காதலியை மனைவியாக்க திட்டமிட்ட கணவன் மனைவியின் வாயில் வலுக்கட்டாயமாக எலிமருந்து ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை: மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலியை மனைவியாக்க திட்டமிட்ட கணவன் மனைவியின் வாயில் வலுக்கட்டாயமாக எலிமருந்து ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலுக்காக கணவன் மனைவியை கொல்வதும் மனைவி கணவனை கொல்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொலைகள் பெரும்பாலும் ஒருவருக்கு தெரியாமல் மறைமுகமாகவே நடைபெறும்.
போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில்தான் உண்மைகள் வெளிப்படும். இந்நிலையில் நாகை அருகே கள்ளக்காதலியை திருமணம் செய்யப்போகிறேன் என கூறி கணவன் கட்டிய மனைவியின் வாயில் எலிமருந்தை ஊற்றி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் திருஞானசம்பந்தம். 32 வயதான இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த வினோதா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

கணவனின் கள்ளக்காதல்
கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் திருஞானசம்பந்தத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அடித்து துன்புறுத்திய கணவன்
கணவனின் கள்ள தொடர்பு குறித்து மனைவி வினோதா அவரிடம் கேட்டுள்ளார். அதெல்லாம் நீ கேட்கக்கூடாது என்று அதட்டிய கணவன், மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதற்கு திருஞான சம்பந்தத்தின் குடும்பத்தினரும் சப்போர்ட் செய்துள்ளனர்.

உடைந்து போன வினோதா
திருஞானசம்பந்தம் கள்ளக்காதலி வீட்டிலேயே கிடையாய் கிடக்க கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருக்கட்டத்தில் திருஞானசம்பந்தம், தனது கள்ளக்காதலியை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியதால் உடைந்து போனார் வினோதா.

கொலை செய்ய திட்டம்
நான் இருக்கும் வரை அது நடக்காது என்ற அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருஞானசம்பந்தம் இனிமேலும் இவளை விட்டுவைத்தால் தன் நிம்மதி பறிபோகும் என்று எண்ணி அவரை கொல்ல திட்டமிட்டார்.

வாயில் எலி மருந்தை ஊற்றி
இதைத்தொடர்ந்து திருஞானசம்பந்தமும் அவரது குடும்பத்தினரும் வினோதாவின் வாயில் எலி மருந்தை ஊற்றிக் கொல்ல முயன்றனர். இதனால் உயிரைக் காத்துக்கொள்ள அலறினார் வினோதா.

மருத்துவமனையில் அனுமதி
அவரது அலறல் சத்தம்கேட்டு அங்கு திரண்டனர் அக்கம்பக்கத்தினர். இதைத்தொடர்ந்து அந்த கொலைக்கார கும்பலிடம் இருந்து வினோதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீஸ் விசாரணை
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வினோதா அளித்த புகாரின் பேரில் திருஞானசம்பந்தம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என மொத்தம் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரும் பரபரப்பு
கள்ளக் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக கட்டிய மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றி கணவன் மற்றும் குடும்பத்தார் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications