Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்காவை ஆபாசமாக பேசிய அச்சக உரிமையாளரை கழுத்தை அறுத்துக்கொன்ற ‘பலே‘ தம்பி!

அக்காவை ஆபாசமாக பேசியதால் அச்சக உரிமையாளரை 17 வயது சிறுவன் தனது நண்பனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: அக்காவை ஆபாசமாக பேசியதால் அச்சக உரிமையாளரை 17 வயது சிறுவன் தனது நண்பனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள வம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். 48 வயதனா இவர் தேவிகாபுரத்தில் அச்சகம் நடத்தி வந்தார்.

இவருக்கு விருதாம்பாள் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சங்கர் கடந்த 20 ஆம் தேதி தேவிகாபுரம்-போளூர் சாலையில் உள்ள மலையடிவாரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

திடுக்கிடும் தகவல்கள்

திடுக்கிடும் தகவல்கள்

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஆபாசபடங்கள்

ஆபாசபடங்கள்

அதாவது அச்சக உரிமையாளர் சங்கர், தனது கடையில் ஜெராக்ஸ் போடுவது, ஆபாச படங்களை மாணவர்களின் செல்போனில் டவுன்லோடு மேற்கொள்வது போன்றவற்றை செய்து வந்துள்ளார்.

பாலியல் தொழிலாளிகளுடன்

பாலியல் தொழிலாளிகளுடன்

அதன்படி ஐடிஐ படிக்கும் 17 வயது மாணவர் ஒருவரும் இவரது கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சங்கர் ஆசைவார்த்தை கூறி, விபச்சார பெண்களுடன் மாணவனை நட்பு கொள்ளச்செய்து உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.

அக்காவை ஆபாசமாக வர்ணிப்பு

அக்காவை ஆபாசமாக வர்ணிப்பு

இதனை வைத்து மாணவனை சங்கர் மிரட்டி வந்துள்ளார். ஒருநாள் மாணவன் பைக்கில் தனது அக்காவுடன் சென்றதை பார்த்த சங்கர் மாணவனிடம் அவரது சகோதரியை ஆபாசமாக கூறி வர்ணித்துள்ளார்.

மனவேதனையில் மாணவன்

மனவேதனையில் மாணவன்

மேலும், அவர் குளிப்பதை படம் எடுத்து வரும்படி கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவன் சங்கரை கொலை செய்ய தனது நண்பனுடன் திட்டமிட்டுள்ளான்.

தயாராக இரு..

தயாராக இரு..

அதன்படி, கடந்த 20ஆம் தேதி நண்பனுடன் அச்சகத்துக்கு சென்ற மாணவர், ‘இன்று மாலை அழகான பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து வருகிறேன். மலையடிவாரத்தில் தயாராக இரு' எனக்கூறி சென்றுள்ளார்.

மிளகாய் பொடியை தூவி

மிளகாய் பொடியை தூவி

இரவு 8 மணியளவில் சங்கரும் மலையடிவாரம் சென்றார். அங்கு சங்கர், மாணவன், அவனது நண்பன் ஆகிய 3 பேரும் செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளனர். சிறிது நேரத்தில், மாணவரின் நண்பன் மிளகாய் பொடியை சங்கரின் கண்ணில் தூவியுள்ளார். '

கொலை - சீர்திருத்தப்பள்ளி

கொலை - சீர்திருத்தப்பள்ளி

பின்னர் அவர்கள், மறைத்து வைத்திருந்த கட்டையை எடுத்து சங்கரை தாக்கி, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றனர். பின்னர் சங்கரை தூக்கிக்கொண்டு புதரில் வீசிவிட்டு சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து 2 பேரையும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+