அலங்காநல்லூரில் அமர்ந்திருந்த பெண்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்.. இளம் பெண் படுகாயம்
அலங்காநல்லூரில் போலீஸ் நடத்திய தடியடி மற்றும் கல்வீச்சு தாக்குதலில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.ரத்தம் கொட்டியபடி அவர் கீழே விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தின. இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஊர்த்தலைவர்கள் அறிவித்தனர். ஆனாலும் ஒரு பிரிவினர் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதனை ஏற்காமல் மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி விரட்டினர். கல்வீச்சும் நடைபெற்றது. இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட நடு தெருவில் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்றவர்களையும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications