நெற்றியை துளைத்த சாவியுடன் மருத்துவமனை வந்த இளைஞர்... போதை நபருடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
சேலம்: நெற்றியை துளைத்து ஊடுருவிய சாவியுடன் மருத்துவமனைக்கு ஒருவர் அழைத்து வரப்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த முருகன் நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான தியாகராஜன். இவரது மனைவி கவியரசி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு, கெங்கவல்லி பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு, தியாகராஜன் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்புவதற்காக அன்றிரவு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

ஏற்காடு செல்லும் பேருந்துக்காக காத்திருந்த போது, குழந்தைகள் இருவரும் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் அங்குள்ள நடைபாதை ஓரமாக குழந்தைகளை தூங்க வைத்துள்ளார். இரவு 10 மணியளவில், ஏற்காடு பேருந்து வந்ததால் சீட் பிடிப்பதற்காக குழந்தைகளை மனைவியிடம் விட்டு சென்றுள்ளார்.
அப்போது குடிபோதையில் அங்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், தூங்கி கொண்டிருந்த குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கவியரசி சத்தம் போட்டதால், அவரிடமும் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றார். இதை தியாகராஜன் வந்து தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த போதை இளைஞர், தனது கையில் வைத்திருந்த கார் சாவியை எடுத்து தியாகராஜனின் நெற்றியில் வேகமாக குத்தினார். இதில் அந்த சாவி 2 அங்குலத்திற்கு தியாகராஜனின் நெற்றிக்குள் துளைத்துச் சென்றது.
இதனால் வலியால் மயங்கி கீழே விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நெற்றியில் துளைத்த சாவியுடன் இளைஞர் அழைத்து வரப்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அறுவை சிகிச்சை மூலம் நெற்றியில் இருந்து சாவி அகற்றப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பள்ளப்பட்டி போலீசார் 32 வயதான அருண் என்பவரை கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications