என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்.. கரூர் காவல் நிலையத்தில் 2 பெண்கள் அடிதடி!
கரூர்: கரூரில் மாவட்டத்தில் வாலிபர் ஒருவரை இரண்டு பெண்கள் சொந்தம் கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையின் போது இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாசின் (30). அவருக்கும், கரூரை சேர்ந்த ஜாஸ்மீன் (27), என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கரூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ரேணுகா (28). என்ற பெண்ணுடன், பாசினுக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாம். ரேணுகா ஏற்கனவே திருமணம் ஆனவர்.
இந்நிலையில், அந்த இரண்டு பெண்களும் பாசினை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி புகார் அளித்துள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து இருதரப்புக்கும் இடையே அடிதடியும் நடந்துள்ளது.

காவல் நிலையத்தில் புகார்
இந்நிலையில், பாசினின் முதல் மனைவி ஜாஸ்மீன், தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி, கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எஸ்.பி அலுவலத்தில் புகார்
இதையடுத்து, ரேணுகாவும், பாசினை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளில் புகார் கொடுத்தார்.

இருதரப்பையும் விசாரியுங்கள்
இதைத்தொடர்ந்து, இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்கும்படி, கரூர் மகளிர் போலீசாருக்கு, எஸ்.பி.,அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் அடிதடி
அதன்படி, நேற்று, பாசின், ஜாஸ்மீன், ரேணுகா ஆகியோர், அவரவர் குடும்பத்துடன் மகளிர் காவல் நிலையத்தில் வந்தனர். அப்போது இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே திடீரென இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

அடிதடியால் பரபரப்பு
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இரு தரப்பினரையும் விலக்கி விட்டு, அவர்களை தனித்தனியே அமர வைத்து விசாரணை நடத்தினர். இதனால், காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விசாரணையின் போது இருதரப்பிலும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications