எந்த வேலையா இருந்தாலும் செய்ய ரெடி.. சம்பளம் வேண்டாம்.. ஆனா...? இந்த அலப்பறையை பாருங்க மக்களே!
எந்த வேலையா இருந்தாலும் செய்ய ரெடி, சம்பளம் வேண்டாம், ஆனா இதை மட்டும்வேலையா இருந்தாலும் செய்ய ரெடி, சம்பளம் வேண்டாம், ஆனா இதை மட்டும் கொடுங்கள் என ஆசாமி ஒருவர் அலப்பறை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: எந்த வேலையா இருந்தாலும் செய்ய ரெடி, சம்பளம் வேண்டாம், ஆனா இதை மட்டும் கொடுங்கள் என ஆசாமி ஒருவர் அலப்பறை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த வேலை மட்டும்தான் செய்வேன், இத்தனை மணி நேரம் தான் செய்வேன், சொன்னப்படி சொன்ன தேதியில் டான் என கைக்கு சம்பளம் வந்துவிட வேண்டும் என கூற கேட்டிருப்போம். இது ஒரு ரகம்.
சம்பளம் கூட வேண்டாம், நல்ல வேலை, மூன்று வேளை சாப்பாடு, தங்க இடம் கொடுத்தால் போதும் என ஒரு காலத்தில் கூற கேட்டிருப்போம்.. கேள்விபட்டிருப்போம். இது மற்றொரு ரகம்.

சேலம் வெள்ளைச்சாமி
இந்நிலையில் சேலத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு வேலை கேட்டு செய்யும் அலப்பறை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தனது பெயர் வெள்ளைச்சாமி என்றும், சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் அந்த நபர்.

சகல வேலைக்கும் ரெடி
தான் ஒரு ஆல்ரவுண்டர் எனவும் எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயார் என்றும் கூறுகிறார் அவர். கூட்டுவது, துடைப்பது, பாத்ரூம் க்ளீனிங் காய்கறி நறுக்குவது என சகல வேலைகளும் செய்ய தயார் என்கிறார்.

எச்சில் ஊறும் லிஸ்ட்
மேலும் தான் காசு பணத்திற்கு ஆசைப்படவில்லை என்றும் சம்பளம் ஒரு பைசா கூட தேவையில்லை. மூன்று வேளை சாப்பாடு வேண்டும் என போடுகிறாரே ஒரு லிஸ்ட்.. அப்பப்பா கேட்கும்போது நமக்கே நாக்கில் எச்சில் ஊறுகிறது.

சாப்பாடு மெனு வித் சரக்கு
அதாவது காலையில் வெடக்கோழி சாப்பாடாம், மத்தியம் வஞ்சிரம் மீன் குழம்புடன் சாப்பாடு வேண்டுமாம். இரவு டின்னர் இளசா வெள்ளாட்டுக்கறி குழம்புடன் சாப்பாடு வேண்டுமாம் அந்த ஆல் ரவுண்டருக்கு. மேலும் தினம் படுக்கும்போது 4 பாட்டில் சரக்கு வேண்டும் என்றும் பிராண்டுடன் நிபந்தனை விதிக்கிறார் வெள்ளைச்சாமி.

பல்லுக்கு பதமாக இருக்கும்
அதோடு நிற்கவில்லை ஏன் இந்த சாப்பாடு வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, வஞ்சிரம் மீனில் முள் இருக்காதாம் குழம்பு ருசியாக இருக்குமாம். சாப்பிட இதமாக இருக்குமாம், இளசா வெள்ளாட்டுக்கறி பல்லுக்கு பதமாக இருக்கும் உடலுக்கு நல்லது என்பதால் வேண்டும் என்கிறார்.

மேலே தூக்கி விட்டுவிடுவேன்
தனது கல்வித்தகுதி என அந்த காலத்திலேயே எல்கேஜி படித்திருப்பதாகவும், வேலைக்கு சேர்ந்த ஒரே மாதத்தில் முதலாளியை மேலே தூக்கி விட்டுவிடுவேன் என உத்தரவாதமும் அளிக்கிறார் அந்த ஆல்ரவுண்டர் வெள்ளைச்சாமி. அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications