ஜெயமோகன் செய்திருப்பது படுகேவலமான சுயவிளம்பரம்!- அ மார்க்ஸ் தாக்கு
தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவிருப்பது முன்பே தெரிந்தும், ஒரு ஆண்டு வரை அமைதி காத்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் இப்போது மறுத்திருப்பது படுகேவலமான சுயநலமே என சமூக ஆர்வலர் அ மார்க்ஸ் அந்தோணிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது:
தனக்கு பத்மஸ்ரீ விருது அளிக்க இருப்பது ஜெயமோகனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெரியுமாம்.
எனக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே தெரியும்.

என் பழைய பதிவுகளை இறக்கிப் பாருங்கள். இந்த முயற்சிகள் நடப்பது குறித்து மோடி குரூசுக்குப் பரிசளிக்க[ப்பட்ட காலத்திலேயே எழுதியுள்ளேன்.
முதலில் சீடர் மோடிகுரூஸ்... இப்பொது குரு ஜெயமோகன்...
எந்த வியப்பும் இல்லை. ஒரு இந்துத்துவ அரசு இந்துத்துவ எழுத்தாளர்களுக்கு விருது அளிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் இதழில் பணியைத் தொடங்கிய ஒருவரை இன்று அவர்களின் ஆட்சி கவுரவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கடைகளில் வைத்து விற்கப்பட்ட நூல்களில் ஒன்றின் ஆசிரியருக்கு பத்மஸ்ரீ என்ன பாரத ரத்னா கூட வழங்குவார்கள்.
இது குறித்த ஜெயமோகனின் அறிக்கையைப் பாருங்கள். எத்தனை போலித்தனம். வழக்கம்போல 'தேசத் துரோக எழுத்தாளர்கள்' மீது எத்தனை காழ்ப்பு.
விருது பெற்றுத் தர 'முயற்சிகள்' மேற்கொள்ளப்படுவது முன்னமே தெரியுமாம். பரிசை மறுப்பதற்கு இப்போது காரணங்களைச் சொல்லும் ஜெயமோகன் அப்போதே முயற்சிகள் செய்தவர்களிடம் இதைச் சொல்லியிருப்பதுதானே.
இதென்ன நாடகம்?
முயற்சி செய்வதைப் புன்முறுவலுடன் அங்கீகரிப்பது. விருது அறிவிக்கப்பட்டவுடன் மறுப்பது. படு கேவலமான சுய விளம்பரம் அன்றி இது வேறென்ன?
-இவ்வாறு மார்க்ஸ் எழுதியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications