வலைஞர்கள் மனதில் பாகுபலி ரேஞ்சுக்கு உயர்ந்த ஓபிஎஸ்…. டுவிட்டரில் #OPS4CM டிரெண்ட்
சென்னை : ஒரு வழியாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை வீட்டுக்கு அனுப்பாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது. அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவதை வைத்து தனிக்கட்சி துவங்குங்கள் என்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வலம் வந்தது.
இப்போதோ ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து டிவிட்டர் சமூகவலைதளத்தில் டூவீட்கள் பறப்பதால், #OPS4CM டிரெண்டிங்கில் உள்ளது.
சமூகவலைதளங்களில் அதிகம் எழுதப்படும் கருத்துகள் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகள் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்தாற்போல், தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான டுவீட்டுகள் திடீரென டிரெண்டாகி உள்ளது.
|
முதல்வர் ஓபிஎஸ்
#OPS4CM என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, டிவிட்டர் வாசிகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதில் மீம்ஸ்களும், கிண்டல்களும் இடம்பெற்றுள்ளன.
|
புழுவும் புலி ஆகும்
கண்ணீருடன் பதவியேற்றுக்கொண்ட ஓபிஎஸ் படத்தை போட்டு அவரை புலி ரேஞ்சுக்கு சித்தரித்துள்ளார் ஒருவர்.
|
அமைதிப்படை
இப்போதைக்கு ஓபிஎஸ் மனநிலை என்று அமைதிப்படை சத்யராஜ் படத்தை பதிவிட்டுள்ளார் ஒருவர்.
|
எதிரான கூட்டமா?
இன்று தேர்தல் பிரசாரம் தொடர்பாகவும், தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் அமைச்சர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதனிடையே, சமூகவலைதளங்களில், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை ஏந்தி டிவீட்கள் பறக்க விட்டுள்ளனர்.
|
ஏன் இப்படி?
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி சர்ச்சைகளுக்கிடையே, உட்கட்சி விவகாரங்கள் வெளியே வருவது தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
2முறை முதல்வர்
இரண்டு முறை தமிழக முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெள்ள நிவாரணப்பணியின் போது நடுவீதியில் அமர்ந்து டீ குடித்த படத்தைப் போட்டு, இது சரியான நேரம் என்று கூறியுள்ளனர்.
|
பாகுபலி
பாகுபலியின் பிரம்மாண்ட சிலை படத்தைப் போட்டு அதை ஓபிஎஸ் என்றும் கீழே சிறிய சிலையின் பெயரை ஜெயா என்றும் பெயரிட்டுள்ளனர்.

பதவி தப்புமா?
நீங்க எல்லாம் நல்லா வருவீங்க ராசா. டுவிட்டரில் டிரெண்ட் ஆனது ஓபிஎஸ்க்கு நல்ல செய்தியா இருந்தாலும், ஜெயலலிதாவிற்கு இது கெட்ட செய்திதானே? எப்படியோ இதனால் ஓபிஎஸ் பதவி பறிபோகாமல் இருந்தால் சரிதான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications