கரூரில் ஒருதலைக் காதலால் கொடூரம்... காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து... 2 பேர் கைது
கரூர்: கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரின் மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ்-2 படித்து வருகிறார்.

அந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சுரேஷ் (30). என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாயவனுக்கும் தெரிந்த நிலையில், இதை மாயவனும் ஆதரித்து வந்தாராம்.
இந்த நிலையில், கடந்த, 8-ஆம் தேதி மாலை அந்த மாணவியை சுரேஷ் சந்தித்துள்ளார். அப்போது, தன்னை காதலிக்கச் சொல்லி அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த சுரேஷ் அந்த மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதைத் தடுக்க வந்த மாணவியின் பாட்டிக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் காயம் அடைந்த, இருவரும், கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், சுரேஷ் மற்றும் அவரது தந்தை மாயவன் ஆகியோரை, நேற்றிரவு கைது செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications