Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு சித்தப்பா செய்யற காரியமா இது?

15 வயது சிறுமியை மகள் என்றும் பாராமல் அவரது சித்தப்பா மிரட்டி திருமணம் செய்து குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: 15 வயது சிறுமியை மகள் என்றும் பாராமல் அவரது சித்தப்பா மிரட்டி திருமணம் செய்து குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தை உறவு முறை, சகோதர உறவு முறை என்றும் பாராமல் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே அண்ணன் மகள் என்றும் பாராமல் 15 வயது சிறுமியை அவரது சித்தப்பாவே கடத்தி சென்று மிரட்டி திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 வயது மகள்

15 வயது மகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருந்திரக்கோட்டையை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இந்த தம்பதிக்கு 15 வயதில் 10ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் உள்ளார்.

வீடு திரும்பவில்லை

வீடு திரும்பவில்லை

இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார் அந்த மாணவி. பள்ளியில் இருந்து அனைத்து மாணவர்களும் வீடு திரும்பிய நிலையில் ஜோதிலட்சுமியின் மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

வீடு திரும்பவில்லை

வீடு திரும்பவில்லை

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களிலும் மாணவியை தேடினர். ஆனால் மாணவி வீடு திரும்பவும் இல்லை அவர் குறித்த தகவலும் கிடைக்கவில்லை.

போலீசார் தேடல்

போலீசார் தேடல்

இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் மாணவியை தேடிவந்தனர்.

மிரட்டி திருமணம்

மிரட்டி திருமணம்

அப்போது சிறுமியின் சித்தப்பா ரமணிதரன் என்பவர் மாணவியை மிரட்டி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக மாணவியை மீட்ட போலீசார் அவரை தாயாரிடம் ஒப்படைத்தனர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

மேலும் சிறுமியின் சித்தப்பா ரமணிதரனை அறந்தாங்கி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகள் முறையான பெண், அண்ணன் மகள் என்ற எந்த சலனமும் இன்றி சித்தாப்பாவே சிறுமியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+