காதலியுடன் வந்தால் 20%, மனைவியுடன் வந்தால் 45% ஆஃபர், இருவரும் வந்தால் ஃபிரி: அசத்தல் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காதலர் தினம்...பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?

  சென்னை: நாடு முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த அசத்தல் போட்டோ வைரலாகியுள்ளது.

  உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் மால்களில் காதல் ஜோடிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

  A photo became viral on Social media about valentine's day

  இந்நிலையில் சமூக வலைதளங்களில் போட்டோ ஒன்று வைரலாகியுள்ளது. அதாவது ஒரு கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள போர்டில் காதலர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதனை தொடர்ந்து கேர்ல் ஃபிரண்டுடன் வந்தால் 20 சதவீதம் ஆஃபர் என்றும், மனைவியுடன் வந்தால் 45 சதவீதம் ஆஃபர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரையும் ஒரேநேரத்தில் சேர்த்து அழைத்து வந்தால் ஃபிரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் அப்ளை என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த போர்டு வைக்கப்பட்டிருப்பது ஹோட்டலுக்கு வெளியிலா அல்லது துணிக்கடைக்கு வெளியிலான என்பது தெரியவில்லை.

  எங்கு வைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரியவில்லை. ஆனால் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A photo became viral on Social media about valentine's day. It gives 20% offer to if go with girl friend, and it gives 45% offer if goes with both it gives free.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற