மயிலாடுதுறை எஸ்பி ஆபிஸில், ராத்திரி பூட்டிய ஏசி அறையில் தனிமையில் போலீஸ் ஜோடி.. திடீரென வந்த டிஎஸ்பி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பூட்டிய அறைக்குள் நள்ளிரவில் தனிமையில் இருந்த போலீஸ் ஜோடி, டிஎஸ்பி வந்த போது கையும் களவுமாக சிக்கினார்கள். இதையடுத்து அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
புதிய மாவட்டமாக உருவான மயிலாடுதுறை நகரில் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் மயிலாடுதுறை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான போலீசார் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்கள்.

மாவட்ட எஸ்பியின் கீழ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் மயிலாடுதுறை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஏ.சி. அறை ஒன்றில் ஒரு ஆண், ஒரு பெண் என போலீஸ் ஜோடி ஒன்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் உடனடியாக அங்கு விரைந்து சென்ற துணை காவல் கண்காணிப்பாளர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து, கதவை தட்டி இருக்கிறார். சில வினாடிகள் யாருமே கதவை திறக்கவில்லை.
இதனையடுத்து அந்த அதிகாரி, பூட்டிய அறைக்கு உள்ளே இருப்பது யார்? நீங்களாக வெளியில் வர்றீங்களா, அல்லது கதவை உடைத்து உள்ளே வரட்டுமா? என்று கேட்டிருக்கிறார். நிலைமை கைமீறி சென்று விட்டதை உணர்ந்த அந்த ஜோடி மெதுவாக கதவை திறந்து வெளியில் வந்திருக்கிறார்கள்..
ஆண் பெண் காவலர்கள் ஒரே அறையில் இருந்து வெளியே வருவதை பார்த்த அந்த துணை காவல் கண்காணிப்பாளர், இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த ஆண் காவலர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் உள்ளவர் என்றும், அந்த பெண் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் போலீஸாக பணியில் உள்ளவர் என்பதும், இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்திய அறிக்கையை சமர்பித்தார். இதனையடுத்து பணியின்போது ஒழுங்கீனமாகவும், தவறாகவும் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், ஆண் மற்றும் பெண் காவலர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பூட்டிய அறைக்குள் நள்ளிரவில் தனிமையில் இருந்த போலீஸ் ஜோடி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications