Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்துக்காக பெற்ற தாயை இப்படியா கொடூரமாக கொல்வது.. கேட்கும் போதே பதறுதே!!

சென்னையை அடுத்த பாலவாக்கம் அருகே சொத்திற்காக தனது தாயையே கட்டையால் அடித்துக் கொலை செய்து முகத்தில் தீவைத்த கொடூர மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சொத்துக்காக தாயைக் கொன்ற மகன்

    சென்னை: பாலவாக்கம் அருகே சொத்திற்காக தனது தாயையே கட்டையால் அடித்துக்கொன்ற மகன் கொசு மூட்டத்தில் அவரது முகத்தை கருக்கிய சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.

    பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும் என்பதையெல்லாம் பெற்ற தாய் விஷயத்திலேயே மகன் ஒருவர் உண்மையாக்கியுள்ளார்.

    ஆம் சொத்துக்கு ஆசைப்பட்டு 10 மாதம் சுமந்து பெற்றவர், வயதானவர் என்ற எந்த ஈவு இரக்கமும் இன்றி மகன் ஒருவர் தனது தாயை துடிக்க துடிக்க கொலை செய்துள்ள சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.

    ஒரே மகன்

    ஒரே மகன்

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் மணியம்மை தெருவைச் சேர்ந்தவர் ராணி அம்மாள். இவருக்கு பெர்னாட் என்கிற பர்னபாஸ் என்ற மகன் ஒருவர் உள்ளார்.

    தாயுடன் சொத்து தகராறு

    தாயுடன் சொத்து தகராறு

    கணவரை இழந்த ராணி அம்மாள் அங்குள்ள குடியிருப்பில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் ராணியின் கணவர் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி மகன் பெர்னாட் என்கிற பர்னபாஸ் அடிக்கடி தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    கட்டையால் அடித்த மகன்

    கட்டையால் அடித்த மகன்

    அதற்கு ராணி அம்மாள் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெர்னாட் வீட்டிற்கு வெளியே கட்டிலில் அமர்ந்திருந்த ராணி அம்மாளின் தலையில் கட்டையால் அடித்துள்ளார்.

    கத்தி கதறியும் இரக்கமில்லை

    கத்தி கதறியும் இரக்கமில்லை

    ராணி அம்மாள் சாகும் வரை அவரை துடிக்க துடிக்க கட்டையால் அடித்துள்ளார். அவர் எவ்வளவோ அழுது புரண்டும் கெஞ்சியும் கொஞ்சம் கூட அதனை சட்டை செய்யாமல் அடித்தே கொன்றுள்ளார் பெர்னாட்.

    கொசு விரட்ட மூட்டியிருந்த தீ

    கொசு விரட்ட மூட்டியிருந்த தீ

    அதோடு நிற்கவில்லை அவரின் சொத்து வெறி கொசுவை விரட்டுவதற்காக மூட்டியிருந்த தீயில் ராணி அம்மாளின் முகத்தை அழுத்தி நெருப்பில் கருக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    மகன் கைது

    மகன் கைது

    கொலை குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராணி அம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சொத்துக்காக தாயை கொடூரமாக கொன்ற மகன் பெர்னாட்டையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    நெஞ்சை பதற செய்யும்

    நெஞ்சை பதற செய்யும்

    சொத்துக்காக பெற்ற தாயை மகன் ஒருவர் கேட்பவரின் நெஞ்சை பதற செய்யும் வகையில் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+