ஜெ.வுக்கு இரங்கல் தெரிவிக்க... 28ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்
தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 28ஆம் தேதி கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்து.
சென்னை: தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டத்தை 28ஆம் தேதி கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்புக் கூட்டம் வரும் 28ஆம் தேதி கூட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அறவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து அவர் மட்டும் பேசுவதா, அல்லது அவை முன்னவர் மூலம் தீர்மானத்தை முன்மொழிந்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் பேச வைப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிகிறது. மேலும் இந்த சிறப்புக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி மற்றும் மறைந்த முன்னாள் எம்எம்ல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி மறைந்த கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications