கோவையில் ஸ்பெஷலாக தயாராகிறது.. கருணாநிதிக்கான பிரசார வாகனம்
கோவை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதி ஊர், ஊராக பிரச்சாரம் செய்ய ஏதுவாக அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு வாகனம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும் இந்த கூட்டணிக்கு தேமுதிகவை வரவழைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

வயோதிகத்தால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அரசியல் பணிகளை கவனித்து வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. வயதானாலும் சரி, சக்கர நாற்காலியும் கையுமாக இருந்தாலும் சரி திமுக பொதுக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.
தேர்தலையொட்டி அவர் ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்க உள்ளார். இந்நிலையில் அவர் பிரச்சாரத்திற்காக ஒரு டெம்போ டிராவலரை வாங்கி அதில் சகல வசதிகளும் செய்ய கோவையில் உள்ள வாகன ரீமாடலிங் கம்பெனியான கோயாஸிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கோயாஸ் நிறுவன எம்.டி. பி.வி. ரியாஸ் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி வாகனத்தில் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்து வசதியாக பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வாகனத்தில் அவரின் சக்கர நாற்காலியை ஏற்ற முடியும். வாகனத்தில் வை-பை, ஹோம் தியேட்டர், ஸ்பாட்லைட்டுகள், ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன், ஆம்ப்ளிஃபையர்கள் பொருத்தப்படுகின்றன. அவர் வாகனத்தில் செல்கையில் டிவியும் பார்க்க முடியும் என ரியாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications