கோவையில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி... பதட்டம்
கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை வஊசி மைதானத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு நீரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிரப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள போராட்டக் களங்களில் அதிரடியாக குவிந்த போலீசார் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். கோவை வஊசி மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்களை போலீசார் போராட்டத்தை கைவிட்டு கலைந்துபோக கூறினர்.
இதற்கு மாணவர்கள் உடன்படாதால் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் போராட்டக்களத்திலேயே தீக்குளிக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே போலீசார் நடத்திய தடியடியால் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை சக போராட்டக்காரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications