மயிலாப்பூரில் பரபரப்பு.. நடு ரோட்டில் திடீர் பள்ளம்.. மக்கள் அதிர்ச்சி!
சென்னை: மயிலாப்பூரில் திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் அப்பகுதி மக்கள் அதிர்சியடைந்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரி அமைந்துள்ள பி.எஸ்.சிவசாமி சாலை அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டது. ஒரு வழி பாதையான இந்த சாலையில் பேருந்துகள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்கின்றன. லஸ், அடையாறு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான இதில் காலை 11 மணி அளவில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்களும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால், வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள் மண்ணைக் கொட்டி பள்ளத்தை நிரப்பிய போதும் குழி சரியாக மூடப்படவில்லை.
இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தரமற்ற சாலைகளே இது போன்ற பள்ளங்கள் ஏற்பட காரணம் என்று கூறிய பொதுமக்கள், இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications