மொட்டை மாடியில் வீசப்பட்ட 3 மாத குழந்தையின் தலை.. சந்திரகிரகணத்துக்காக நரபலி கொடுக்கப்பட்டதா?
ஆந்திராவில் வீட்டின் மொட்டை மாடியில் 3 மாத குழந்தையின் தலை வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திராவில் வீட்டின் மொட்டை மாடியில் 3 மாத குழந்தையின் தலை வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
152 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நேற்று முன்தினம் அபூர் சந்திர கிரகணம் தோன்றியது. சூப்பர் மூன், பிளட்டட் மூன், ப்ளு மூன் ஆகிய மூன்றும் ஒரே நாளில் தோன்றியது.
இது அரிய நிகழ்வு என்பதாம் தொடக்கம் முதல் நிறைவு வரை மக்கள் நாடு முழுவதும் இதனை கண்டுகளித்தனர். இந்நிலையில் இந்த அபூர்வ சந்திர கிரகணத்தின் போது ஆந்திராவில் பயங்கர கொடூரம் ஒன்று அரங்கேறியுள்ளது.

3 மாத குழந்தை நரபலி
அதாவது ஹைதராபாத்தை அடுத்த சில்கனகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் 3 மாத குழந்தை ஒன்று நரபலி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் தலையை மட்டும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ஆணா? பெண்ணா?
மேலும் குழந்தையின் உடலை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை.

துண்டிக்கப்பட்ட தலை
குழந்தையின் தலை கூரிய வாளால் வெட்டப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள போலீசார், அந்த குழந்தையின் பெற்றோர் யார், எந்த பகுதியை சேர்ந்த குழந்தை அது என்ற எந்த தகவலும் தெரியாமல் திணறி வருகின்றனர்.

கிரகணத்துக்காக நரபலி?
சந்திர கிரகணத்திற்கு மறுநாள் குழந்தையின் தலை மட்டும் மொட்டை மாடியில் தனியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மந்திரவாதிகள் யாரேனும் அமானுஷ்ய சக்தியை பெற வேண்டும் என்ற நம்பிக்கையிலோ அல்லது புதையல் வேண்டியோ கிரகணத்தின் போது குழந்தையை பலி கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

போலீஸார் முயற்சி
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ரச்சகொண்டா போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொல்லப்பட்ட குழந்தை குறித்த விவரங்களையும் அவர்கள் சேகரிக்க முயன்று வருகின்றனர்.

பெரும் அதிர்ச்சி
குழந்தையை கொன்றவர்கள் யார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சந்திர கிரகணத்தின் போது 3 மாத குழந்தை கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications