மாமியார்- மருமகள் சண்டையை நிறுத்த இதை விட "பவர்புல் ஆயுதம்" வேறு இல்லீங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : உலகிலேயே ஆண்களுக்கு மிக கடினமாக இருப்பது தாயும், மனைவி சண்டையிட்டு கொள்வதை தடுப்பதுதான். அதற்கு மிக எளிதாக தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதை போல திருமணம் ஆனவுடன் ஆண் என்பவர் தாய், மனைவி ஆகிய இருவருக்கு இடையில் சிக்கி தவிப்பார். இதுதான் பெரும்பாலான வீடுகளில் நடக்கும்.

இந்தியா- பாகிஸ்தான், இந்தியா- சீனா சண்டைக்கு தீர்வு காணலாம். ஆனால் இந்த இரு பெண்களை வைத்துக் கொண்டு ஆண்கள் படும்பாடு இருக்கே அப்பப்பா....

எதுஎதுக்கெல்லாமோ கோச்சிங் கிளாஸ் இருக்கு ஆனா மாமியார்- மருமகள் சண்டைய தீர்ப்பது குறித்து கற்றுக் கொடுக்க எந்த கிளாஸும் இல்லை. எனினும் ஆண்களுக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த வீடியோ ஒருவர் கத்தியை காட்டியும் முடிவுக்கு வராத மாமியார்- மருமகள் சண்டை, வேறு ஒரு ஆயுதத்தை காட்டியதும் இரு பெண்களும் தலைத்தெறிக்க ஓடுகின்றனர். நீங்கள் அது என்னவென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்... சிறு துரும்பும் பல்குத்த உதவும்.....

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A video goes viral in social medias showing how the man stopped the quarrel between wife and his mother.
Please Wait while comments are loading...