கொலுசு கடை ஓரத்திலே.. வட்டாட்சியர் போட்ட செம குத்து.. ஆரவாரம் செய்த ஊழியர்கள்.. தீயாய் பரவும் வீடியோ
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வட்டாட்சியர் குத்தாட்டம் போட்டு வரவேற்ற காட்சிகள் வைரலாகியுள்ளன.
Recommended Video
சென்னையில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் நோக்கில் ஜோதி ஓட்டம் தொடங்கியது. இதை பிரதமர் நரேந்கிர மோடி ஜூன் 19 ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த ஜோதி ஓட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நேற்றைய தினம் தமிழகத்தை வந்தடைந்தது.

75 நகரங்கள்
இந்த ஜோதியை ஏந்தி வீரர்கள் உற்சாகமாக வலம் வந்தனர். 40 நாட்களில் இந்தியாவின் 75 நகரங்களில் இந்த செஸல் ஒலிம்பியாட் ஜோதி வலம் வந்தது. இதையடுத்து நேறஅறைய தினம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வட்டாட்சியர் வரவேற்றார்.

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இந்த ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மற்றும் வருவாய்த் துறையினர் சக அலுவலர்களுடன் குத்தாட்டம் போட்டு ஆரவாரத்துடன் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்றார்.

கைதட்டி ஆரவாரம்
இந்த ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியின் போது செஸ் போர்டு போல் தரையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டிக்கர் மீது வட்டாட்சியர் நடனம் ஆடினார். அவர் கொலுசு கடை ஓரத்திலே எனும் பாடலுக்கு அவர் நடனம் ஆடினார். அங்கிருந்த குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வட்டாட்சியருடன் பணியாற்றும் சில ஊழியர்களும் அந்த நடனத்தில் கலந்து கொண்டனர்.

ஒலிம்பியாட் ஜோதி
இந்த ஒலிம்பியாட் ஜோதி இன்றைய தினம் மாமல்லபுரத்தை வந்தடைந்தது. இந்த ஜோதியை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வழங்க இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைத்தார். அவர் அந்த ஜோதியை ஏந்தி விழா நடைபெறும் இடத்தை வலம் வந்தார். இன்று மாலை இந்த ஜோதி சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை துவக்க விழா நிகழ்ச்சியிலும் இந்த ஜோதி இடம்பெறுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications