ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதல்கள்... கிழங்கு வியாபாரிக்கு நேர்ந்த கதியைப் பாருங்க!

நாமக்கல் அருகே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கிழங்கு வியாபாரியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர் அடித்துக்கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை கொலை செய்த பெண்- வீடியோ

    நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கிழங்கு வியாபாரியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர் அடித்துக்கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி, பெருமாப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கொக்கி கிருஷ்ணன். 47 வயதான இவர் கிழங்கு வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 21-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் கிராம முட்புதரில் கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கொக்கி கிருஷ்ணன் கொலை

    கொக்கி கிருஷ்ணன் கொலை

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கொக்கி கிருஷ்ணன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து கண்டுபிடிக்க போலீசார் பொட்டணம் கிராமத்திற்கு சென்று உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கள்ளக்காதலில் கொக்கி கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    சந்திராவுடன் கள்ளதொடர்பு

    சந்திராவுடன் கள்ளதொடர்பு

    இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஆத்துக்குழிப்பள்ளம் பகுதியை சேர்ந்த 47 வயதான சந்திரா என்பவருக்கும் கொக்கி கிருஷ்ணனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து ஆத்துக்குழிப்பள்ளம் பகுதிக்கு சென்ற போலீசார், சந்திராவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை கூறினார் சந்திரா. அதாவது கொக்கி கிருஷ்ணனும், சந்திராவும் சேந்தமங்கலம், நாமக்கல், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிழங்கு வியாபாரம் செய்து வந்தனர்.

    வீட்டில் உல்லாசம்

    வீட்டில் உல்லாசம்

    இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சந்திராவின் கணவர் கடந்த ஆண்டு திடீரென மரணம் அடைந்தார். இதனால் சந்திரா தனிமையில் இருந்து வந்தார். இதனால் கொக்கி கிருஷ்ணனுடனா நெருக்கம் அதிகரித்தது. இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சந்திரா வீட்டில் தனியாக இருக்கும் போது அடிக்கடி அங்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார் கொக்கி கிருஷ்ணன். இந்த நிலையில் கொக்கி கிருஷ்ணன் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார்.

    வேறு பெண்ணுடன் தொடர்பு

    வேறு பெண்ணுடன் தொடர்பு

    அப்போது, அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் சந்திரா வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டார் கொக்கி கிருஷ்ணன். இது குறித்து கேட்க அடிக்கடி அவருக்க போன் செய்தார் சந்திரா. ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் போன் அழைப்பை துண்டித்தார் கொக்கி.

    என்னைத்தேடி வராதே

    என்னைத்தேடி வராதே

    அப்போது தான் சந்திராவுக்கு, அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் திடீரென சந்திரா வீட்டிற்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த உல்லாசத்திற்கு அழைத்தார் கொக்கி. அதற்கு மறுத்த சந்திரா வேறு ஒரு பெண்ணுடன் கொக்கி கிருஷ்ணனுக்கு தொடர்புள்ளதை காரணம் காட்டி இனிமேல் என்னைத் தேடி வராதே என பொட்டில் அடித்தாற் போல் கூறியுள்ளார்.

    கொக்கி கிருஷ்ணன் கொலை

    கொக்கி கிருஷ்ணன் கொலை

    இதனால் ஆத்திரமடைந்த கொக்கி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தனது கள்ளக்காதலன் வடிவேலுவை அழைத்துள்ளார் சந்திரா. அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட சந்திராவும் வடிவேலும் சேர்ந்து கொக்கி கிருஷ்ணனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்தில் பலியானார் கொக்கி கிருஷ்ணன்.

    புதர் பகுதியில் உடல் எரிப்பு

    புதர் பகுதியில் உடல் எரிப்பு

    இதையடுத்து தனது மகள் புவனேஸ்வரிக்கு தகவல் தெரிவித்த சந்திரா, கொக்கி கிருஷ்ணன் உடலை சாக்குமூட்டையில் கட்டி மூன்று பேரும் சேர்ந்து அருகில் உள்ள முட்புதரில் வீசி எரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சந்திரா சேந்தமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மகள் புவனேஸ்வரி மற்றும் வடிவேல் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+