கள்ளக்காதலி கொடுத்த செக்ஸ் டார்ச்சர்.. தாங்க முடியாமல் போட்டுத் தள்ளிய கள்ளக்காதலன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரூர்: அரூர் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் கொலையுண்ட சம்பவத்தில் அவரது கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.

அண்ணாலப்பட்டி தரைபாலத்தின் அடியில் வியாழக்கிழமை சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அந்த சடலத்தின் அருகே கிடந்த ஆதார் கார்டை வைத்து இறந்தது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகரைச் சேர்ந்த லட்சுமி (47) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஊத்தங்கரையை சேர்ந் கார்த்திகேயன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

திடுக் தகவல்

திடுக் தகவல்

விசாரணையில் சில திடுக் தகவல்கள் கிடைத்தன. லட்சுமியின் கணவர் ராஜா மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார்.

நெருக்கத்தை குறைத்ததால்...

நெருக்கத்தை குறைத்ததால்...

அதன்பிறகு லட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்துக் கொண்டனர். இந்த நிலையில் லட்சுமியுடன் இருந்த நெருக்கத்தை கார்த்திகேயன் குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

பணம் கேட்டு தொந்தரவு

பணம் கேட்டு தொந்தரவு

ஆனால் லட்சுமி அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். மேலும் பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கார்த்திகேயன் நண்பர்களுடன் இருக்கும் போது அங்கு வந்து லட்சுமி தகராறில் ஈடுபட்டார்.

காட்டுப் பகுதியில்...

காட்டுப் பகுதியில்...

இதனால் லட்சுமி மீது கார்த்திகேயனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் லட்சுமி தனது கணவரின் பி.எப். பணத்தை எடுக்க சேலம் செல்ல வேண்டும் என கார்த்திகேயனிடம் கூறினார். உடனே அவரும் லட்சுமியை காரில் ஏற்றி கொண்டு சேலத்துக்கு புறப்பட்டார்.

இரும்புக் கம்பியால்...

இரும்புக் கம்பியால்...

போகும் வழியில் அரூரில் இருந்து சிந்தலபாடி செல்லும் வழியில் கடத்தூர் அருகே அண்ணலாப்பட்டி காட்டுப் பகுதிக்கு வந்தபோதும் கார்த்திகேயனுக்கு லட்சுமி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாராம். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கார்த்திகேயன் காரில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து லட்சுமி தலையில் தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

புடவையால் கழுத்தை நெரித்து...

புடவையால் கழுத்தை நெரித்து...

லட்சுமியின் கழுத்தை புடவையால் நெரித்தார். இதில் அவர் இறந்தார். உடனே கார்த்திகேயன் சடலத்தை தரைபாலத்தின் கீழே வீசிவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து போலீஸார் கார்த்திகேயனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Lady from Harur was murdered by a man who had illegal relationship with her. Police has arrested the person.
Please Wait while comments are loading...