கோவையில் கடன் தொல்லையால் தாய், தந்தையை கொலை செய்து தற்கொலை செய்த இளைஞர்
Recommended Video

கோவை: கடன் தொல்லையால் தாய், தந்தையை கொலை செய்து விட்டு டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு திருப்பூரில் இருந்து நேற்று மதியம் ஒருவர் பேசியுள்ளார். அவர் கூறுகையில் ஆவாரம்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாலமுருகன், மனைவி லட்சுமி மற்றும் அவரது மகன் வைரமுத்து ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி தனக்கு அனுப்பியுள்ளதாக கூறினார்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது 2 பேர் கீழே ரத்த வெள்ளத்தில் சடலமாகவும் மற்றொருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் கிடந்தனர். அவர்கள் 3 பேரும் இறந்து 2 நாட்களாகியிருக்கலாம் என தெரியவந்தது.
விசாரணையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்கள் தனியார் பள்ளி பஸ் டிரைவர் பாலமுருகன் (55), அவரது மனைவி லட்சுமி (47) என்றும் தூக்கில் தொங்கியபடி இருந்தவர் அவர்களது மகன் வைரமுத்து (28) என்பதும் தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. டிராவல்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.
அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால் வைரமுத்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்த பிறகு தனது பெற்றோரிடம் கடனை கேட்டு தொல்லைக் கொடுக்கக் கூடும் என்பதால் அவர்களை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இதனால் தாய், தந்தையின் மணிக்கட்டில் கத்தியால் அறுத்துள்ளார். அதன்பிறகு அவர்களது கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். பின்னர் தனது மணிக்கட்டையும் அறுத்து கொண்டு ஒரு அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு கொண்டார்.
வைரமுத்து இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு தனது சொத்தின் ஆவணங்கள் மற்றும் எழுதி வைத்த கடிதம் வீடியோ பதிவு ஆகியவற்றை திருப்பூரில் உள்ள உறவினர் ஒருவருக்கு கூரியரில் அனுப்பியுள்ளார். அது உறவினருக்கு கிடைத்ததும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications