ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, குருப்பெயர்ச்சி வழிபாடு: பவானி கூடுதுறையில் விழாக்கோலம்
ஈரோடு: பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, குருப் பெயர்ச்சி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால் நீராட வரும் பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்பெரும் விழாக்கள் ஒரே நாளில் வருவதால் பவானி கூடுதுறை விழாக்கோலம் பூண்டுள்ளது.
புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் ஆடி மாதத்தில் ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை வழிபாடுகள் பிரசித்தி பெற்றவை. இந்நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூத்தோர் வழிபாடு நடத்துவதோடு, பல்வேறு பரிகார வழிபாடுகளிலும் ஈடுபடுவர். இதனால், கூடுதுறை பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குருப்பெயர்ச்சி ஆகிய மூன்று முக்கிய தினங்களும் ஒரே நாளில் வருவதால் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆடிப்பெருக்கு விழாவுக்கு மேட்டூர் அணையிலிருந்து தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடாது எனவும், ஆண்கள், பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கரையோரத்தில் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூத்தோர் வழிபாடு மற்றும் பரிகாரத்துக்கு மண்டபம் தாற்காலிக கூரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கும் பக்தர்களை உடனடியாக மீட்கும் வகையில் உயிர்காக்கும் உபகரணங்களுடன் தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தவும் கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனித்தனியே பாதுகாப்பாக நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பவானி காவல்துணை கண்காணிப்பாளர் ஜானகிராம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications