டெல்லி மக்களின் நம்பிக்கையை வீணாக்கிவிட்டது ஆம் ஆத்மி கட்சி: நாராயணசாமி
சென்னை: டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவை, அவர்கள் வீணாக்கி விட்டனர் டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தும், அவர்கள் தயங்குகின்றனர். என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஞாயிறன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பம் காரணமாக அதன்மீது விவாதம் நடத்தி நிறைவேற்ற முடியவில்லை.

வரும் நாட்களில் எதிர்க்கட்சிகள் அமைதியாக இந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறோம்.
இந்த மசோதாவில் ஒரு திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. உயர் பதவியில் உள்ளவர்கள் மீது ஒருவர் புகார் தந்தால் அதை உடனே ஏற்றுக்கொள்ளக்கூடாது. அந்த புகார்தாரரிடம் உரிய ஆதாரம் இருக்கிறதா? என்பதை விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்வார்கள்.
சிபாரிசு கடிதம் தர எம்.பி.க்கள் லஞ்சம் பெற்றதாக வந்த செய்தியை பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். இதுபற்றி முறையான புகார் எதுவும் வரவில்லை. ஆனாலும் இது பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மை இருக்குமானால் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தும், அவர்கள் ஆட்சி அமைக்க முன்வராமல் பின்வாங்கி தயங்குகின்றனர். டெல்லி மக்கள் அளித்த ஆதரவை, அவர்கள் வீணாக்கி விட்டனர். மக்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என்றார் நாராயணசாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications