1 ஸ்வீட் நியூஸ்.. திடுதிப்பென்று சொன்ன தமிழ்நாடு அரசு.. ஆவினின் அடுத்த அறிவிப்பு பாருங்க.. சபாஷ்
தர்மபுரி: தமிழக மக்களுக்கு இனிப்பு செய்தியை அறிவித்துள்ளது தமிழக அரசின் பால்வளத்துறை.. இதற்கான அறிவிப்பை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ளார்.
அடுத்தடுத்த அதிரடியை ஆவின் கையில் எடுத்து வருகிறது.. சமீபத்தில்கூட, மிக குறைந்த கொழுப்பு சத்துள்ள பாலை தயாரித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்ய போகிறதாம்..

அதுவும் விலை எவ்வளவு தெரியுமா? புதிய வகை மஞ்சள் நிற பாக்கெட் 500 மி.லி. 19 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதால்தான், பச்சை நிற பால் பாக்கெட் வாயிலாக, ஆவினுக்கு லிட்டருக்கு, 12 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. அதேபோல, ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதால், லிட்டருக்கு, 16 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது
மஞ்சள் நிற பாக்கெட்: எனவேதான், குறைந்த கொழுப்பு சத்து கொண்ட நீல நிற பால் பாக்கெட் விற்பனை வாயிலாக, 6 ரூபாயும், அதிக கொழுப்பு சத்துள்ள பாலை தயாரித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்பனை செய்ய, ஆவின் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. மஞ்சள் நிற பாக்கெட்டில் தரப்பட உள்ள இந்த பால், 500 மி.லி., 19 ரூபாய்க்கு கிடைக்கும் என்று அறிவிப்பு வந்தால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. விரைவில் தீபாவளி வர உள்ள நிலையில், தித்திப்பு செய்தியை கூறியுள்ளார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
பால் பொருட்கள்: தருமபுரி மாவட்டம் ராமியண அள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் மனோ தங்கராஜ்.. அப்போது, "ஆவின் தயாரிப்பு பொருட்களான பட்டர், சீஸ், பனீர் உள்ளிட்டவை தரமானதாகவும், சுவையானதாகவும் உள்ளதால் தேவை அதிகமாக உள்ளது. இதனால் மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தவும், கூடுதலாக சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆவின் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், கடந்த தீபாவளியை விட நிகழாண்டில் 25 சதவீதம் ஆவின் இனிப்புகளுக்கு தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கு ஏற்ப தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார் அமைச்சர்.

ஆய்வு பணிகள்: முன்னதாக, தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, அதிகாரிகளின் முனைப்பான பணிகளின் மூலம் தான் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க முடியும். எனவே, அதிகாரிகள் அதற்கேற்றபடி பணியாற்ற வேண்டும்.
அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும் தொடர்புடைய கால்நடை மருத்துவர்களின் விவரங்கள் எளிதாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications