நாடு போற்றிய தலைவராக இருந்தபோதும் நாற்காலிக்கு ஆசைப்படாத கலாம்
சென்னை: நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோதும் சரி, அதற்கு பின்னரும் சரி தான் பங்கேற்ற விழாக்களில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாதவர் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த அப்துல் கலாம் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.
அரசியல் கட்சிகளைத் தாண்டி இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்ற அந்தஸ்தோடு குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்தவர் கலாம். மீண்டும் குடியரசுத் தலைவர் ஆகும் வாய்ப்பு கிடைத்த போதும், ஆசிரியர் பணியே தனக்கு முக்கியம் என அதனை மறுத்து விட்டார்.

மீண்டும் ஜனாதிபதி வாய்ப்பு...
பதவிகளுக்காக, நாற்காலிகளுக்காக பலர் அல்லும் பகலும் அலைந்து கொண்டிருக்க, நாட்டின் முதல் குடிமகன் ஆகும் வாய்ப்பு இரண்டாம் முறை கிடைத்தும் அதனை மறுத்தவர் கலாம்.

தனி நாற்காலிகள் வேண்டாம்...
இது மட்டுமின்றி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தனக்கென தனி சிறப்பு நாற்காலிகள் போட அவர் அனுமதிப்பதில்லை. மற்றவர்களும் தானும் சமம் என கருதி எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததாலேயே மக்கள் ஜனாதிபதியாக உலகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார்.

வெல்வெட் நாற்காலி...
சில ஆண்டுகளுக்கு முன், வடசென்னை சுங்கச்சாவடி அருகே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார் கலாம். அப்போது மேடையில் அவருக்கு மட்டும், 'வெல்வெட்' போர்த்திய நாற்காலி போடப் பட்டிருந்தது. மற்றவர்களுக்கு மர நாற்காலி போடப்பட்டிருந்தது. இதை கவனித்த கலாம், 'எனக்கும் மர நாற்காலியே போடுங்கள்' எனக்கூறி, 'வெல்வெட்' நாற்காலியில் அமர மறுத்தார்.

பாதுகாவலருக்கும் நாற்காலி...
இதேபோல், ஜனாதிபதியாக இருந்த போது, குரோம்பேட்டையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றார் கலாம். அப்போது தன் பாதுகாவலருக்கு நாற்காலி போடப்படாததை கவனித்து, அவருக்கும் நாற்காலி போட வலியுறுத்தினார். பாதுகாவலருக்கு நாற்காலி போடப்பட்ட பின்னரே கலாம் தனது நாற்காலியில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications