அபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு.. சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!
அபிராமியின் அடக்க முடியாத வெறித்தனமான ஆசையே குழந்தைகளை கொலை செய்ய தூண்டியுள்ளதாக லட்சுமி ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அபிராமியின் அடக்க முடியாத வெறித்தனமான ஆசையே குழந்தைகளை கொலை செய்ய தூண்டியுள்ளதாக லட்சுமி ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கடந்த 30 மற்றும் 31ஆம் தேதிகளில் தனது இரண்டு குழந்தைகளை பாலில் மாதவிடாய் மாத்திரைகளை கலந்து கொடுத்தும் மூச்சை நிறுத்தியும் துடிக்க துடிக்க கொலை செய்தார்.
கள்ளக்காதலனான பிரியாணி கடை ஊழியருடன் ஏற்பட்ட காதலால் குழந்கைதளை கொன்ற அவர் கணவரையும் கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அபிராமியின் கொடூர செயல்
இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை நடத்தி வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அபிராமியின் கொடூர செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

என்னால் நம்பமுடியவில்லை
இதுதொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அவர் கூறியிருப்பதாவது, அபிராமி செய்த செயலை என்னால் நம்பவே முடியவில்லை. இயற்கையாகவே ஒரு தாய் தன்னுடைய குழந்தையை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என மட்டும் தான் நினைப்பாள்.

மன ரீதியாக பிரச்சரன
அபிராமி குழந்தைகள் மேல் பாசம் இல்லாதவராக இருந்திருந்தால் குழந்தையை பெற்று வளர்ந்திருக்க மாட்டாள். அபிராமி இப்படி நடந்துக் கொள்ள முக்கிய காரணம், ஒரு வேலை அவர் மன ரீதியாக தெளிவில்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது அவருக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும்.

வெறித்தனமான ஆசை
இல்லையெனில் தன்னுடைய மனதை அடக்க முடியாத அளவுக்கு அபிராமிக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்க வேண்டும். தன்னுடைய ஆசை கண்ணை மறைத்து குழந்தை மற்றும் கணவரை அவர் கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

கொலைத்திட்டம்
கள்ளக்காதலால் சில கணவர்கள் தன்னுடைய மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டவர்களுமே தவிர, குழந்தைகளை யாரும் கொள்ள வேண்டும் என நினைக்கமாட்டார்கள். ஆனால் அபிராமி இப்படி செய்ததை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications