'மானம் காக்கும் ஈனப்பெருஞ்சுவரே'... ஸ்டாலின் மானத்தை வாங்கிய திமுக போஸ்டர்
மார்ச் 1ம் தேதி மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ரொம்ப ஆர்வக் கோளாறில் ஒருவர் எப்படி போஸ்டர் அடித்திருக்கிறார் என
சென்னை: ஆர்வக் கோளாறு என்றால் என்ன என்று தெரியாதவர்கள் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளுக்காக அடித்த போஸ்டரைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
கடந்த 1ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள். தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பல வகைகளில் ஸ்டாலினை வாழ்த்தி போஸ்டர் அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்படி நானும் டீம்ல இருக்கிறேன் என்பதை காட்டிக் கொண்ட ஒருவர் பேஸ்புக்கில் படாத பாடு படுகிறார்.

ஆர்வக் கோளாறு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டத்தில் உள்ள நிர்வாகி இ. சிம்சோன் எம்.ஏ., மு.க. ஸ்டாலினை வாழ்த்துவதாக எண்ணி இழிவு படுத்தி ஒரு போஸ்டர் அடித்துள்ளார். தனது பெயருக்கு பக்கத்தில் எம்ஏ என்று பட்டம் போட்டு போஸ்டர் அடித்துள்ளவர் இந்த பெருந்தவறைக் கூடவா கவனிக்கமாட்டார்...

ஈனப் பெருஞ்சுவரே!
அந்த போஸ்டரில் இருந்த வாசகம் இதுதான்.. மார்ச் 1ல் பிறந்த நாள் காணும் எங்கள் மானம் காக்கும் ஈனப்பெருஞ்சுவரே! வாழ்க பல்லாண்டு.. இ.சிம்சோன் எம்.ஏ.

சீனப் பெருஞ்சுவர்
உலகின் ஆக நீண்ட சீனப்பெருஞ்சுவருக்கு இணையாக ஸ்டாலினை சொல்ல வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் எழுத்துப் பிழையை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டிருக்கிறார் சிம்சோன். அதனால் இவர் முகநூலில் படாத பாடு பட்டு வருகிறார்.

பிழையோடு திமுக தமிழ்
இந்த ஒரு போஸ்டர் மட்டுமல்ல.. திமுகவினர் அடிக்கும் பல போஸ்டர்களின் இது போன்ற அபத்தமான எழுத்து பிழைகளை காண முடியும். தமிழால் வளர்ந்த திமுக தமிழை குலைக்கலாமா என்று பலர் இந்த போஸ்டர்களை பார்த்து புலம்பிக் கொண்டு போவது காதில் விழத்தான் செய்கிறது.

புத்தகங்கள் பரிசு
இந்த பிறந்த நாளில் அனைவரும் புத்தகங்களை பரிசளிக்க மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மலைபோல் குவிந்த புத்தகங்கள் மாவட்ட நூலகங்களுக்கு கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதனைப் போன்றே பிழையில்லாமல் போஸ்டர் அடிக்க திமுகவினருக்கு ஒரு வேண்டுகோள்விடுங்கள் ஸ்டாலின். நீங்க நல்லா இருப்பீங்க...
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications