கோயம்பேட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதற்கு ஏசி கேஸ் கசிவு காரணம் இல்லையாம்!
கோயம்பேடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம் ஏசியில் இருந்து வெளியேறிய வாயு இல்லை என தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: கோயம்பேடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம், ஏசியில் இருந்து வெளியேறிய வாயு இல்லை என தென் இந்திய குளிர்சாதன பழுதுபார்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 2ஆம் தேதி கோயம்பேடு மேட்டுகுப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சரவணன், கலையரசி அவர்களது மகன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வீட்டினுள் மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்து கிடந்தனர்.
இவர்களது உயிரிழப்பிற்கு ஏசி எந்திரத்திலிருந்து வெளியேறிய வாயு தான் காரணம் என கூறப்பட்டது. இந்த தகவல் அந்த பகுதி மட்டும் இல்லாமல் ஏசி எந்திரம் பயன்படுத்தும் அனைவரிடத்திலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.

ஏசி பழுதுப்பார்ப்போர் விளக்கம்
இந்நிலையில் மூவர் உயிரிழப்பிற்கும் ஏசி வாயுவிற்கும் எந்த தொடர்பும் இல்லையென தென்னிந்திய குளிர்சாதன பழுதுபார்ப்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர்.

மின்மாற்றியை மாற்றவில்லை
இதுகுறித்து சென்னை அண்ணாநகர் அருகே செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில பொது செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் விபத்துக்கான காரணம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பொழுது ஜெனரேட்டரை பயன்படுத்தியதாலும், மின் மாற்றியை மாற்றாமல் நேரடியாக பயன்படுத்தியதே என தெரிவித்துள்ளனர்.

கார்பன் மோனாக்ஸைடு
அதேபோல் படுக்கை அறையின் உள்ளே வைத்து ஜெனரேட்டரை பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு அறையில் முழுவதும் பரவியதால் மூவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அச்சப்பட வேண்டாம்
உயிரிழப்பிற்கும் ஏசி எந்திரத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. இதனால் ஏசி எந்திரத்தை பயன்படுத்த அச்சப்பட தேவையில்லை என தென்னிந்திய ஏசி பழுது பார்ப்போர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications