அருப்புக்கோட்டை: பள்ளி மாணவன் பாஸ்கரனை கொன்ற 'ஓரினச்சேரிக்கை' கொலையாளி கைது
கோவை: அருப்புக்கோட்டை அருகே பள்ளி மாணவனை வகுப்பறையில் கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு தப்பி ஓடிய கொலையாளி மாரீஸ்வரனை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எல்லையோர கிராமமான அயன்கரிசல்குளம் அருப்புக்கோட்டையை அடுத்த பந்தல்குடி அருகேயுள்ளது. இந்த ஊரை சேர்ந்த விவசாயி கோபால் என்பவரின் மகன் பாஸ்கரன். இவர் பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவந்தார்.
அதே அயன்கரிசல்குளத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி செல்வம் என்வரது மகன் மாரீஸ்வரன் (வயது 18). அதே பள்ளியில் பிளஸ் ஒன் படித்த மாரீஸ்வரன், பெயிலானதால், படிப்பை நிறுத்திவிட்டார். இவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் உண்டு எனக் கூறப்படுகிறது.
மாரீஸ்வரன் அடிக்கடி பாஸ்கரனை ஹோமோ செக்ஸ்க்கு அழைத்து தொந்தரவு கொடுத்துள்ளார். அதற்கு மறுத்த பாஸ்கரன் இது தொடர்பாக தனது பெற்றோரிடம் புகார் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரனின் தந்தை கோபால் இது தொடர்பாக மாரீஸ்வரனின் பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் போலீஸிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாஸ்கரன் மீது மாரீஸ்வரன் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்த பாஸ்கரன், தனது வகுப்பறையில் உட்கார்ந்திருந்தார். ஆசிரியர்கள் 8.30 மணிக்குத்தான் வருவார்கள் என்பதால் பாஸ்கரனும் சில மாணவர்களும் வகுப்பறையில் தனியாக உட்கார்ந்திருந்தனர்.
அப்போது பள்ளி வகுப்பறையில் நுழைந்த மாரீஸ்வரன் நேரடியாக பாஸ்கரனிடம் சென்று தகராறு செய்தார். பிறகு மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியால் பாஸ்கரனின் நெஞ்சம் மற்றும் முகத்தில் பலமாக குத்தினார்.மேலும் இறுதியாக பாஸ்கரனின் தலையில் கத்தியால் பலமாக குத்தினார்.
பாஸ்கரனின் அலறல் சத்தம் கேட்ட மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையவும், தலையில் குத்திய கத்தியை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் கத்தி கைக்கு வரவில்லை. உடனே அங்கிருந்து தப்பி பள்ளி சுவர் ஏறி குதித்து தயாராக நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டார்.
உடனடியாக 108 ஆம்புல்ன்ஸ்சை வரவழைத்த மாணவர்கள் பலத்த காயமடைந்த பாஸ்கரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியில் பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தப்பி ஓடிய குற்றவாளியான மாரீஸ்வரனை பிடிக்க போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் பாஸ்கரன் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைக்கவே, உடனடியாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கொலையாளி மாரீஸ்வரனை இன்று மாலையில் கைது செய்தனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications