சுவாதிக்கு ஏற்கனவே தெரிந்தவர்தான் கொலையைச் செய்திருக்க முடியும்... ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா
சென்னை: சுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் இந்த கொலையை செய்திருக்க முடியாது என்று திருச்சி ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்துள்ளதால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கை 3 தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுவாதி கொலை ரயில் நிலையத்தில் நடந்ததால் முதலில் ரயில்வே போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனி விஜயா சென்னைக்கு வந்து கடந்த 3 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினார். சுவாதியின் உறவினர்கள், நண்பர்களிடம் தொடர் விசாரணை நடத்ரிய ஆனி விஜயா, நேற்று காலை சுவாதியின் வீட்டுக்கு ஆனி விஜயா சென்றார். அங்கு அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆனி விஜயா,
பொதுமக்கள் முன்னிலையில் சுவாதி அரிவாளால் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவமாக அமைந்து இருக்கிறது. சுவாதி கொலையில் புதிய வீடியோ படங்கள் போலீசிடம் சிக்கி உள்ளன. அதில் கொலையாளியின் உருவம் ஓரளவு தெளிவாக தெரிகிறது. அதை வைத்து கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர் என்றார்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சுவாதியின் தனிப்பட்ட தன்மைகள், அவரது செயல்பாடுகள் மற்றும் குணாதிசியங்கள் எப்படி இருக்கும்? அவளுக்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன? என்பது தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வீட்டில் சுவாதி எப்படி நடந்து கொள்வார்? எப்படி இருப்பார்? என்பது தொடர்பாக அவரது தந்தை மற்றும் உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் ஆனி விஜயா கூறினார்.
சுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் இந்த கொலையை செய்திருக்க முடியாது. அது மட்டுமே தற்போதைய நிலையில் சொல்ல முடியும். எனவே எல்லா வழிகளிலும் இந்த விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்து வருகிறோம். நிச்சயம் கொலையாளியை விரைவில் நெருங்கி விடுவோம் என்று ஆனி விஜயா தெரிவித்தார்.
ஆனி விஜயா விசாரணை செய்து விட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications