Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு முழுவதும் 10ம் வகுப்பிலேயே தேங்கிய 35 லட்சம் மாணவர்கள்! லிஸ்டில் தமிழ்நாடும் இருக்கே.. ஷாக்கிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு மட்டும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்புடன் பள்ளி கல்வியை நிறுத்திக்கொண்டனர் என்று கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடைநிற்றல் அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் கல்வி முறை என்பது நீண்ட காலமாக விவாதத்திற்கு உட்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி முறை குறித்தும் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பள்ளி கல்வியில் இடை நிற்றல் அதிகமாக இருப்பதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Across the country, 35 lakh students have dropped out of class 10 to class 11

அதாவது, 2021-2022ம் ஆண்டில் நாடு முழுவதும் 10ம் வகுப்பில் சேர்ந்த சுமார் 35 லட்சம் மாணவர்கள், 11ம் வகுப்புக்கு செல்லவில்லை. இதில் 27.5 லட்சம் பேர் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர், 7.5 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். இதில் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) உள்ளிட்ட மத்திய வாரியங்களில் மாணவர்களின் தோல்வி விகிதம் 5 சதவிகிதமாக இருக்கிறது.

இதே தாய்மொழி வழி கல்வியை பலமாக ஊக்குவிக்கும் மாநில வாரியங்களில் தோல்வி விகிதம் 16 சதவிதமாக இருக்கிறது. அதேபோல பல்வேறு வாரியங்களில் பாடப்புத்தகங்கள் ஒன்று போல இருப்பதில்லை என்பதையும் கல்வித்துறை அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திட்டங்கள் வெவ்வேறாக இருப்பதால் CUET, JEE மற்றும் NEET நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயங்குகிறார்கள் என்ற கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

மேற்குறிப்பிட்டதைப் போல 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களில் சுமார் 4.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் (NIOS) மூலம் தேர்வு எழுதுகின்றனர் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. இதில் சோகம் என்னவெனில் இந்த தேர்விலும் தோல்வி விகிதம் 47% முதல் 55% வரை இருக்கிறது என்பதுதான்.

Across the country, 35 lakh students have dropped out of class 10 to class 11

இந்த 35 லட்சம் மாணவர்களில் 85 சதவிகிதமான மாணவர்கள் வெறும் 11 மாநிலங்களில் இருக்கின்றனர். இதில் தமிழ்நாடும் ஒரு மாநிலமாகும். மற்ற மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, அசாம், மேற்கு வங்காளம், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இருக்கின்றன. தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளில் வெற்றி மற்றும் தோல்வியடைந்த மாணவர்களின் விவரம், அவர்கள் எந்த வாரியத்தில் படித்துள்ளார்கள்? போன்றவற்றை மத்திய அரசு சேகரித்து வருகிறது.

இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலத்திற்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கான சரியான பயிற்சி இருந்தால் மட்டும்தான் மாணவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதையும் கல்வித்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+