For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்கார் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்கில் சிகரெட் பிடிப்பது போன்று போஸ்.. நடிகர் விஜய்க்கு சிக்கல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மெர்சலை அடுத்து சர்ச்சையை தொடங்கும் விஜயின் சர்க்கார்- வீடியோ

    சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள, 'சர்கார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி உள்ளது.

    இந்த காட்சியை பாட்டாளி மக்கள் கட்சி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கண்டித்திருந்தார். சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஜய் ஏற்கனவே கூறியிருந்ததை அன்புமணி சுட்டிக் காட்டியிருந்தார்.

    இதனிடையே, 'சர்கார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்' புகைப்பது போன்று தோன்றியுள்ளதற்கு நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

    சுவரொட்டிகள்

    சுவரொட்டிகள்

    மாநில கண்காணிப்புக் குழுவுக்கும், இந்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கும் சிரில் அலக்ஸாண்டர் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விஜய்யின் புதிய படமான சர்கார்' திரைப்படத்தின் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அவர் புகைப்பது போன்று தோன்றியுள்ளார். இது புகையிலை விளம்பர தடைச் சட்டத்தை மீறும் செயலாகும்.

    பொது சுகாதாரம்

    பொது சுகாதாரம்

    இளைஞர்கள் பிரபல நடிகர்களின் செய்கைகளைப் பின்பற்றுவார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். ஒருபுறம் புகையிலை ஒழிப்பு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நடிகர் விஜய் நடித்து வெளியாகும் புதிய படத்தின் சுவரொட்டிகள் பொது சுகாதாரத்துக்கு எதிரானதாகும். இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.

    தணிக்கை குழு

    தணிக்கை குழு

    சட்டத்தை மீறியதற்காக நடிகர் விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாநில கண்காணிப்புக் குழுவுக்கு, இந்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் விஜய்க்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சிரில் அலக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

    மெர்சல் விவகாரம்

    மெர்சல் விவகாரம்

    மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் பாஜகவினர், கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால், சர்கார் திரைப்படத்திற்கோ, ஃபர்ஸ்ட் லுக் காட்சிகளுக்கே எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Cyril Alexander, coordinator of the Tamil Nadu, People's Organization for Tobacco Control, has demanded action against actor Vijay for appearing with cigarette in the 'First Look Poster' of Sarkar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X