Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைக்கிள் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்ததாக பேசிய ஆசிரியயை மிரட்டுவதா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

கல்பாக்கம்: புதுப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்ததாக பேசிய ஆசிரியையை மிரட்டிய திமுக நிர்வாகி சரவணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கல்பாக்கம், புதுப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ் ஆசிரியை ஒருவர் சைக்கிள் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார் என்று பேசியதற்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக நிர்வாகி சரவணன், அந்த ஆசிரியையை அநாகரீக வார்த்தைகளுடன் மிரட்டியுள்ளார். இந்த நிலையில், ஆசிரியையை ஒருமையில் திட்டிய திமுக நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Action should be taken against DMK executive who threatened Tamil teacher: Edappadi Palaniswami

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- 4.8.2023 அன்று கல்பாக்கம், புதுப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் பேசிய அப்பள்ளியின் தமிழ் ஆசிரியை மாணவ மாணவியர் தங்கள் வீடுகளிலிருந்து பள்ளிக்கு சென்று வர வசதியாக மாண்புமிகு அம்மா அவர்கள் விலையில்லா சைக்கிள் திட்டத்தை துவக்கி வைத்ததாக பேசியுள்ளார்.

அப்போது, மேடையில் இருந்து திமுக நிர்வாகி சரவணன் ஆவேசமாக எழுந்து தமிழ் ஆசிரியையிடம் இத்திட்டத்தை மறைந்த கருணாநிதி அவர்கள்தான் துவக்கினார் என்றும், "நீ எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கியதாக பேசலாம்" என்று அநாகரீகமான வார்த்தைகளுடன் வாக்குவாதம் செய்து ஆசிரியை மிரட்டி உள்ளார். முக்கிய விருந்தினர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணக்கர்கள் கலந்து கொண்டுள்ள பொது நிகழ்ச்சியில் முன் உதாரணமாக நடக்க வேண்டிய நிகழ்வில், பெண் ஆசிரியையிடம் திமுக நிர்வாகி சரவணன் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட இந்நிகழ்வை கடுமையாக கண்டிக்கிறேன்.

தொடர்ந்து திமுக-வினர் ஆசிரியர் பெருமக்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் இது போன்று அநாகரீகமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. தவறிழைத்த திமுக நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+