மக்களுக்கு விரோதமான செயல் தமிழகத்தில் நடந்துள்ளது - ஸ்டாலின்

மக்களுக்கு விரோதமான செயல் தமிழகத்தில் நடந்துள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: மக்களுக்கு விரோதமான செயல் தமிழகத்தில் நடந்துள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து ஸ்டாலின் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டசபைக்குழு தலைவராக சசிகலா இன்று தேர்வு செய்யப்பட்டார். அவர் விரைவில் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

Action taken in Tamilnadu is against the people : Stalin

சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் முக்கிய பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் சென்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது சசிகலா அதிமுக சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், மக்களுக்கு விரோதமான செயல் தமிழகத்தில் நடந்திருப்பதாக கூறினார்.

முன்னதாக ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் தமிழக அரசியல் சூழ்நிலையை திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக எந்தவொரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே எடுக்கும் என்றும் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+