அஜீத்தின் விவேகம் ரிலீஸ்... சிவகங்கையில் ரசிகர்கள் அமர்க்கள கொண்டாட்டம் - வீடியோ

நடிகர் அஜீத் நடித்துள்ள விவேகம் இன்று ரிலீஸ் ஆனதையடுத்து அவரது சிவகங்கை ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கையில் நடிகர் அஜீத்தின் விவேகம் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் காலையிலேயே பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

நடிகர் அஜீத்தின் 57ஆவது திரைப்படமான 'விவேகம்' இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார். அஜீத்தின் இந்தத் திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

Actor Ajith's Vivegam released today and fans become so fanatic

சிவகங்கையில் விவேகம் படம் வெளியானதை ஒட்டி அஜீத் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், அஜித்தின் பிரமாண்ட கட் அவுட்டுக்கு பன்னீர் அபிஷேகம் செய்தனர். ஆயிரக்கணக்கான அஜீத் ரசிகர்கள் குழுமி நின்று இதனைக் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அஜீத் ரசிகர்கள் பன்னீர் அபிஷேகத்துடன் நின்றுவிடாமல் பொதுமக்களுக்கு விவேகம் வெளியான மகிழ்ச்சியில் மரக்கன்றுகளை வழங்கினர். அஜீத் இம்மாதிரியான செயல்களை எல்லாம் செய்ய வேண்டாம் எனப் பலமுறை ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+