காவிரியை விட எதுவுமே முக்கியமில்லை.. நடிகர் சங்கக் கூட்டத்தில் கொந்தளித்த டிஸ்கோ சாந்தி தம்பி
சென்னை: சென்னையில் இன்று நடந்த நடிகர் சங்கக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக நாம் என்ன செய்ய முடியும் என்று முக்கிய நிர்வாகிககள் கேட்டபோது அதற்கு கோபம் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார் நடிகை டிஸ்கோ சாந்தியின் தம்பியும், நடிகருமான அருண்மொழி வர்மன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் கூடியது. இதில் கர்நாடக விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை டிஸ்கோ சாந்தியின் தம்பியும், நடிகருமான அருண்மொழி வர்மன் சங்க நிர்வாகிகளிடம் ஒரு கடிதத்தினை கொடுத்தார்.

கடிதத்தைக் கொடுத்த அவர் சென்னையில் 18ம் தேதி செலிபிரிட்டி பேட்மிட்டன் லீக் போட்டி நடக்கிறது. இதில் கன்னட நடிகர்களும் கலந்து கொள்கின்றனர். தற்போது காவிரி பிரச்சனைக்காக தமிழக விவசாயிகள் போராடும் நிலையில் அவர்கள் இங்கு வந்தால் பிரச்சனை வரலாம். நமக்கும் உணர்வு இல்லை என்று சொல்லுவார்கள். ஆகையால் இந்த போட்டியை தள்ளி வைக்க வேண்டும். காவிரி பிரச்சனையை விட இந்த போட்டி ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது என்று கூறினார்.
அதற்கு சங்க நிர்வாகிகள், நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அருண்மொழி வர்மன், என்ன சொல்றீங்க, தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். தமிழர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தமிழக இளைஞர் ஒருவரை தாக்கியுள்ளனர். உணர்வுப்பூர்வமாக நாம் இந்த பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்.
நடிகர் அருண்மொழி வர்மன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications