தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் குடிகாரர்களா? நடிகர் ஆர்யா விஷம கருத்து!
மேலோட்டமாக பார்த்தால் ஆர்யா ஏதோ நல்லது சொல்ல வருவது போல இருக்கும் இந்த டிவிட்டர் பதிவு, தமிழ் இளைஞர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்று சித்தரிப்பதை போல உள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு உரிமைக்காக நடந்த மாணவர் எழுச்சியின்போது, மற்றொரு நல்ல விஷயமும் அரங்கேறியது என்றால் அது பன்னாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான மனநிலை இளைஞர்கள் மத்தியில் உருவானது என்று கூறலாம்.
இதை உணர்ந்துதான், தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பு மார்ச் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பன்னாட்டு கூல்ட்ரிங்சுகளை விற்பனை செய்வதில்லை என்று அறிவித்துள்ளன.
இந்நிலையில், கோவை அருகேயுள்ள ஒரு கல்லூரி தனது சர்க்குலரில் மாணவர்கள் பன்னாட்டு குளிர்பானத்தை விரும்புவதில்லை என்பதை உணர்ந்து, இனிமேல் பழச்சாறுகளை மட்டுமே வினியோகிப்போம் என தெரிவித்துள்ளது. இதை நடிகர் ஆர்யா டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

மதுவை விடனுமாம்
அப்படியே வெளிநாட்டு மது வகைகளையும் விட்டுவிட்டு, இவர்கள் பழச்சாறு மற்றும் பழம், காய்கறிகளிலான smoothies சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார் ஆர்யா. மேலோட்டமாக பார்த்தால் ஆர்யா ஏதோ நல்லது சொல்ல வருவது போல இருக்கும் இந்த டிவிட்டர் பதிவு, தமிழ் இளைஞர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்று சித்தரிப்பதை போல உள்ளது.

குடிகாரர்களா மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பெரும் யுக புரட்சியை நடத்தி காட்டிய நிலையில், கல்லூரி சர்க்குலரை காண்பித்து, 'இவர்கள்' வெளிநாட்டு மதுபானத்தை தவிர்க்கலாம் என கூறியுள்ளார் ஆர்யா. அப்படியானால், இவர்கள் என அழைக்கப்படும் கல்லூரி மாணவர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்பதே இவரது கருத்து. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் புரட்சியை ஏதோ குடிபோதையில் நடந்துள்ளதை போல வர்ணித்துள்ளார் ஆர்யா என்ற சந்தேகம் எழுகிறது.

ஜல்லிக்கட்டு
ஏனெனில் இந்த நடிகர் ஆர்யாதான், ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று சில வாரங்கள் முன்பு டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். நெட்டிசன்கள் கழுவி ஊற்றியதால் சுதாரித்துக்கொண்ட ஆர்யா, ஐய்யய்யோ, நான் சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன். நக்கல் செய்யவில்லை என்றார்.

விளாசிய சிம்பு
சிம்பு தனது பேட்டியில் கூட ஆர்யாவை பெயர் குறிப்பிடாமல் இந்த கருத்துக்காகத்தான் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டு சோறை சாப்பிட்டுக்கொண்டு தமிழர் கலாசாரம் என்னவென்று கேட்கிறார்கள். முதலில் அவங்க அப்பா, அம்மாவிடம் தமிழ்னா என்னன்னு கேட்டுவிட்டு வரட்டும் என சாடினார் சிம்பு. இப்போது ஜல்லிக்கட்டு பிரச்சினை ஓய்ந்துள்ள நிலையில், ஆர்யா தனது நக்கல், நையாண்டி அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications